உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தொகுதி மறு வரையறை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:தொகுதி மறுசீரமைப்பு என்பது சில மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. 1971ம் ஆண்டு இருந்த தென் மாநிலங்களின் மக்கள் தொகை, 2011ல் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு தென் மாநிலங்கள் தேசிய முன்னுரிமை கொடுத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியதே காரணம்.எனவே மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து விடும். எனவே, எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுகிறேன்.நாட்டின் அரசியல், சமூக நல்லிணக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்ட விவகாரம் என்பதால், பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்; மாநிலங்களின் அச்சத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Narasimhan
மார் 22, 2025 18:52

குடும்பக்கட்சிகள் மத்தியிலிருந்து ஒன்றொன்றாக மாநிலங்களிருந்தும் துரத்தி அடிக்கப்படுகின்றனர். உனக்கு பின் எங்க அப்பா தான்


Louis Mohan
மார் 22, 2025 17:14

தென் மாநிலங்கள் இவ்விஷயத்தில் ஒன்று படவில்லை என்றால் அனைவருக்கும் தாழ்வு


M Ramachandran
மார் 22, 2025 16:10

அது என்ன உன்னைய்ய சுடாலின் கூப்பிட வில்லை என்பதால் உள்ளேனைய்யா என்று குரல் குடுக்குறீங்களா? அது தான் திருமலை யில் செய்த திரு விளையாடால்கள் மக்கள் நீ செய்த அயோக்கிய தனத்தை தெரிந்து துரத்திவிட்டு விட்டார்களெ.


srinivasan s
மார் 22, 2025 15:10

adutha corrupted person


MP.K
மார் 22, 2025 13:19

தென் மாநிலங்களில் தமக்கு செல்வாக்கு குறைவாக உள்ள காரணத்தால் தாமரை கட்சி சூழ்ச்சி செய்ய வேண்டாம்


Ramesh Sargam
மார் 22, 2025 12:29

Dirty Politics செய்பவர்களை நாட்டிலிருந்து துரத்த ஒரு சட்ட thiruththam வேண்டும்.


swamy
மார் 22, 2025 12:28

உனக்கு இந்த நாட்டில் இனிமேல் வேலையில்லை .... ஓடி போயிடு ....


முக்கிய வீடியோ