உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா விவசாயிக்கு 4 மின் ஊழியர்கள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 22, 2018 அன்று, நாக்பூரில் வசிக்கும் 68 வயதான விவசாயி, வர்த்தக நோக்கத்திற்காக, தனது பண்ணையில், 5,000 மூங்கில் மரங்கள் நட்டு இருந்தார். அவருடைய வயலின் வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின்மாற்ற இரண்டு கம்பிகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு, தீ பற்றியது. மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் பாதிப்படைந்த அந்த விவசாயி, தாசில்தார் மற்றும் போலீசில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து மின்சார வாரியம் மின் இணைப்பபை சரிசெய்தது. வனத்துறை விவசாயி நட்ட மரங்களின் சேதத்தை ரூ.10.27 லட்சமாக மதிப்பிட்டது. இந்த மதிப்பீடு மின்வாரிய நிர்வாக பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் விவசாயிக்கு இழப்பீடாக ரூ.4.2 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயி, நாக்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.விவசாயி அளித்த புகாரில், மின் ஊழியர்கள் அலட்சியம் மற்றும் மின் இணைப்புகளை முறையற்ற முறையில் பராமரித்ததால் சேதம் ஏற்பட்டதாக கூறி, வனத்துறையால் மதிப்பிடப்பட்ட இழப்பீட்டைக் கோரினார்.உடல் மற்றும் மன ரீதியான துயரங்களுக்கு ரூ.2 லட்சமும், புகார் செலவுகளுக்கு ரூ.50,000 மும் கோரியிருந்தார்.நுகர்வோர் ஆணையம் விசாரணை நடத்தியதில், மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டனர் மற்றும் அலட்சியமாக இருந்தனர், இது சேவையில் குறைபாடு, ஆகவே மின்வாரியத்தின் உயர் பதவியில் உள்ள மூன்று பொறியாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அதன் பிராந்திய இயக்குநர் உள்ளிட்ட 4 பேரும் பயிர் சேதத்திற்கு விவசாயிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,உத்தரவு தேதியிலிருந்து (மே 15) 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சுந்தரம் விஸ்வநாதன்
மே 25, 2025 19:53

படத்தில் 400 கி வோ கம்பிகள் காட்டப்பட்டிருப்பதால் நிஜத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பது ஊகமே. 400 கிவோ லைனாக இருந்தால் உரசி தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை.


Anantharaman Srinivasan
மே 25, 2025 19:44

10 லட்சம் இழப்பீடு யார் பணம்..? மின்வாரியத்தின் உயர் பதவியில் உள்ள மூன்று பொறியாளர்கள் மற்றும் அதன் பிராந்திய இயக்குநர் பணமா..? அல்லது அரசு கஜானா பணமா..?


V Venkatachalam
மே 25, 2025 18:13

காசிமணி அண்ணே. . விவசாயி மூங்கில் வளர்த்தது ஆபத்தம்ன்னு சொல்றது அபத்தமா இருக்கு.. உயர் மின் அழுத்தக்கம்பி போகிறது என்பதற்காக விவசாயி பாதிக்கப்பட வேண்டுமா? அப்படியானால் விவசாயிக்கு வாடகை அலங வேறு ஈடு ஏதாவது அரசு அவருக்கு கொடுக்குதா? அப்படி கொடுத்து அதை விவசாயி பெற்றுக்கொண்டு அதன் பின்னும் அவர் மூங்கில் பயிரிட்டார் என்றால் தவறுதான். இப்போ அவருக்கு ஏதும் தரவில்லையே.


GMM
மே 25, 2025 17:28

உயர் அழுத்த மின் கம்பியை சுற்றி 100 அடி அல்லது 30 மீட்டர் வரை எதுவும் இருக்க கூடாது என்பது மின் விதி. மூங்கில் போன்றவை ஒன்றுடன் ஒன்று மோதி தீ பிடிக்கும். ஆணையம், நீதிமன்றம் போன்றவை ஏன் அரசியல்வாதிகள் போல் நிர்வாக விதிகளை மீறுகிறது? மத்திய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.


Kasimani Baskaran
மே 25, 2025 15:56

பொதுவாகவே உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் இருக்கும் பகுதி உயிர்களுக்கு ஆபத்தானது. ஆனால் இவர்கள் அதன் கீழ் மூங்கில் வளர்ப்பது ரொம்பவே அபத்தம்.


SANKAR
மே 25, 2025 17:00

farmer and farming came first .hundreds of years old.poeer lines came later without permission of farmer over his field.


Anantharaman Srinivasan
மே 25, 2025 19:49

உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் செல்லும் வயல்களின் கீழ் பயிர் செய்யக்கூடாதென்றால் பாதி வயல்களுக்கு மேல் காலியாகத்தான் விட வேண்டும். அபத்தமான கமெண்ட் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை