உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரிய வகை கனிமங்களை கைப்பற்ற உலக நாடுகள் கடும் போட்டி: ஜெய்சங்கர்

அரிய வகை கனிமங்களை கைப்பற்ற உலக நாடுகள் கடும் போட்டி: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நாடுகளுக்கு இடையிலான போட்டியில், அரிய வகை கனிம வளங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியே முக்கிய காரணியாக உள்ளது,'' என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.டில்லியில் கவுடில்யா பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது; இன்றைய காலகட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் போரின் தன்மை அடிப்படையில் மாறிவிட்டது. அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால், தொடர்பற்ற போரின் யுகம் (contactless war) தொடங்கியுள்ளது. அசர்பைஜான் - அர்மேனியா, உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், தொடர்பற்ற போர்கள் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய முன்னேற்றங்கள் உலக நாடுகளிடையேயான மனோநிலையில் அதிக தாக்கத்தை எதிரொலிக்கும். குறிப்பாக, நாடுகளுக்கு இடையிலான போட்டியில், அரிய வகை கனிம வளங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியே முக்கிய காரணியாக உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
அக் 06, 2025 06:06

எங்க துக்ளக்கார் குடும்பம் அதுல ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை ..... ஏன்னா அதுக்கு மெனக்கிடணும் ... உடனடி பலன் இருக்காது ..... நோகாம நொங்கு தின்ன முடியாது ....


ஜெய்ஹிந்த்புரம்
அக் 06, 2025 01:33

உலக நாடுக்கள் போட்டியாம். இதென்ன, இதைவிட அநியாயம் கண்முன்னே நடக்கிறது. உள்நாட்டிலேயே பழங்குடி மக்கள், பாகிஸ்தான் எல்லை, சீனா எல்லை என்ற பாகுபாடில்லாமல், மண்ணின் மைந்தர்களை தேசத்துரோகிகளாக முத்திரை குத்தி விரட்டி சிறையில் தள்ளி விட்டு, ஏக்கருக்கு 1 ரூ என்று ஒற்றை கார்ப்பரேட் நிறுவனத்துக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கும் வேலையில் அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன. நாம் தான் தூங்கிக் கொண்டிருக்கிறோம்


ஆரூர் ரங்
அக் 06, 2025 11:24

பொன்முடி மகன் தலைவராக இருக்கும் TNCA மைதானத்துக்கு எத்தனை வாடகை கொடுக்குறாங்க? அதிலும் 2000 கோடிக்கு மேல் பாக்கி. IPL இல் கிடைக்கும் வருமானம் எங்கு செல்கிறது? பெரிய தனியார் ஆலைகளை நடத்த NOMINAL குத்தகைக்கு அரசு நிலம் தருவது 75 ஆண்டுகளாக உள்ள வழக்கம். பழங்குடியினர் வளர்ந்து விடக்கூடாது. நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு சென்று விடக்கூடாது என்ற சுயநலம் காரணமாக அவர்களை தீவீரவாதிகளாக ஆக்குவது நாட்டுக்குக் கேடு.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 06, 2025 01:25

Dr Subramaniya Swamy has shared his views in Facebook as f follows. The Indian governments hesitation to include Ladakh in the Sixth Schedule, which would provide autonomous councils to safeguard tribal lands and culture, seems driven more by corporate interests, particularly those of the Adani Group, than by national security concerns. Ladakhs abundant solar potential and recently discovered mineral deposits, such as lithium and platinum group elements, have drawn significant attention from Adani, evidenced by their 2019 site visit for a ₹45,000 crore solar project and their mining arm’s interest in lithium extraction under the MMDR Act 2023. Reports indicate tribal lands are being leased at nominal rates ₹1/acre for projects potentially worth over $10 billion. While national security is cited due to Ladakh’s strategic border location, the government’s push for large-scale solar and mining ventures, alongside pros over land alienation, suggests that economic interests, particularly favoring conglomerates like Adani, are the primary barrier to granting Sixth Schedule protections, as local governance could limit such corporate projects.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 06, 2025 01:13

லடாக்கில் அதானிக்கு சுரங்க உரிமை கோருவோம்.


Barakat Ali
அக் 06, 2025 06:12

அதானியை சந்திக்கலை ன்னு துக்ளக் மன்னனால் அடிச்சு சொல்ல முடியலையே பாசு ???? சொன்னா ஆதாரத்தை வெளியிடுவேன் ன்னு அண்ணாமலை சொன்னதும் பேண்ட்டு/வேட்டி ஈஈ ரமாயிருச்சோ ????


ஆரூர் ரங்
அக் 06, 2025 11:27

ஆனா அதே அடானி கேரளத்தில் விழிஞம் துறைமுகம் கட்டவும் தமிழகத்தில் சோலார் திட்டம் அமைக்கவும் வா வா என வரவேற்கிறோமே.


மணிமுருகன்
அக் 05, 2025 23:21

அருமை உண்மை அமெரிக்காவின் சூதாட்டமே அதுதாள்


சமீபத்திய செய்தி