மேலும் செய்திகள்
மெய்டி இனத்தவர் கொலை மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
31 minutes ago
உருக்காலை வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலி
35 minutes ago
இந்திய துாதரகம் மீது தாக்குதல் : வெளியுறவு துறை கண்டனம்
1 hour(s) ago
* மாணவி தற்கொலைஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், பாளேபைலு கிராமத்தில் வசித்த அதிக்ஷா, 20, பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று மதியம் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, அதிக்ஷா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.* மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்புதார்வாட், கலகடகியில் வசித்தவர் விவசாயி மகதேவப்பா ஹங்கரகி, 63. இவர் நேற்று கரும்புத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார்.* கஞ்சா பயிரிட்ட விவசாயி கைதுமாண்டியா, பாண்டவபுராவின், டி.எஸ்.சத்ரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ், 40, தன் கரும்புத் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டிருந்தார். இதையறிந்த கலால்துறை அதிகாரிகள், நேற்று காலை தோட்டத்தில் சோதனையிட்டு, ஒன்பது அடி நீளமான கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். விவசாயி கைது செய்யப்பட்டார்.* ஆற்றில் விழுந்து சிறுவன் பலிசிக்கமகளூரு, கலசாவின், நெல்லிபீடு கிராமத்தை சேர்ந்தவர் பிருத்விராஜ், 17. இவர் நேற்று மதியம், தன் வீட்டின் அருகில் பாயும், பத்ரா ஆற்றங்கரையில் உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றார். ஆற்றங்கரையில் நடந்துச் சென்றபோது, கால் தவறி ஆற்றில் விழுந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
31 minutes ago
35 minutes ago
1 hour(s) ago