உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடப்பு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விலக்கு; சிபிஎஸ்இ அறிவிப்பு

நடப்பு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் விலக்கு; சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடில்லி: நடப்பு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து சிபிஎஸ்இ விலக்கு அளித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை தொடர்பாக புதிய வழி காட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. அதில், தற்போது 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ கல்வித்துறை இயக்குநர் பிரக்யா சிங் வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது; நடப்பாண்டில் (2026-27) 10ம் வகுப்பு மாணவர்கள் மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டாம். வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தினால் போதும். அவர்கள் பழைய இரு மொழிக் கொள்கையையே பின்பற்றலாம். 3வது மொழியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.புதிய வழிகாட்டுதல்களின்படி, தற்போது 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் 10ம் வகுப்புக்குச் செல்லும் போது 3வது மொழியில் வாரியம் நடத்தும் தேர்வை எழுத் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை