உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பூரில் சிலிண்டர்கள் வெடித்து 42 தகர செட் வீடுகள் சாம்பல்

திருப்பூரில் சிலிண்டர்கள் வெடித்து 42 தகர செட் வீடுகள் சாம்பல்

திருப்பூர்: திருப்பூரில் சிலிண்டர் வெடித்ததில் 42 தகர செட் வீடுகள் தரைமட்டமாகின. திருப்பூர் காலேஜ் ரோடு, எம்.ஜி.ஆர்., நகரில் சாயா தேவி என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு தகர கொட்டகைகள் அமைத்து வட மாநில தொழிலாளர்கள் , பிற மாவட்ட தொழிலாளர்கள் வசித்து வந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xc41iih2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், திடீரென 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 தகர செட் வீடுகள் எரிந்து சாம்பலாகின. அப்போது, அங்கு ஒருவரும் இல்லாததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை