உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; சென்னை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில், வாலிபர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட், அவரை வழக்கில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.2017ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை சுட்டிக்காட்டி தஷ்வந்த் ஜாமின் கேட்க, சென்னை ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zjip8fwt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் பின்னர் வீட்டில் இருந்த தனது தாயை அடித்துக் கொன்றுவிட்டு, நகைகளுடன் மும்பைக்கு பறந்தார். பலகட்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு தஷ்வந்த்க்கு மரண தண்டனை விதித்தது.தாயை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தஷ்வந்த் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் மரண தண்டனையை உறுதி செய்ததால், அதை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.இந் நிலையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி தஷ்வந்தை சுப்ரீம் கோர்ட் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.முன்னதாக தமது தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 109 )

ASIATIC RAMESH
நவ 07, 2025 16:45

டியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை.... அப்படின்னா.... கைது என்பதே போலியா? மக்களை திசைதிருப்பவா.... அல்லது மக்களை திருப்திப்படுத்தவா?....


என்றும் இந்தியன்
அக் 28, 2025 17:39

நீதிமன்றம் "நிதிமன்றம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் இங்கு வேண்டிய நிதி கொடுங்கள் உங்களுக்கு என்ன நீதி வேண்டுமோ அது கொடுக்கப்படும் என்று இந்த தீர்வினால் தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது


BALACHANDRAN
அக் 26, 2025 11:51

ஐகோர்ட்டில் கொடுத்த ஆதாரங்கள் எதை வைத்து தண்டனை கொடுத்தார்கள் அது ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு சொல்லவில்லை


mohan
அக் 26, 2025 09:49

கலியுகம்... குற்றவாளிகள் வெளியில் பாதுகாப்புடன் நடமாடுகின்றநர் ..


chandran
அக் 23, 2025 14:58

கோர்ட் என்ன பண்ணும்? வாதி govt/police குற்றத்தை சாட்சிகளுடன் வலுவாக நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் கோர்ட் விடுதலை பண்ணி தான் ஆக வேண்டும். நிரூபிக்க முடியவில்லை என்றால் வாதியை எப்படி குற்றவாளி என்று தண்டிக்க முடியும்?


Senthoora
அக் 18, 2025 18:39

இவனுக்கு கர்மா சீக்கிரம் தண்டனை கொடுக்கும்.


S.V.Srinivasan
அக் 16, 2025 11:46

நீ வழக்குலேர்ந்து தப்பிச்சுட்டதா சந்தோஷப்படாதே. அந்த சின்ன குழந்தையின் ஆவி உன்னை சும்மா விடாது. உன் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னை துரத்திக்கிட்டே இருக்கும். இறக்கும் வரை கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்ப.


MUTHU
அக் 25, 2025 07:17

இயலாதவர்கள் தங்களை தாங்களே செய்து கொள்ளும் இறுதி தேற்றுதல் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் அல்லது எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்பது.


S.V.Srinivasan
அக் 15, 2025 16:09

ஒருவேளை இவன் அரசியல் செல்வாக்குள்ள ஆளோ என்ன இழவோ. மொத்தத்தில் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை அறவே போய் விட்டது. பழைய காலப்படி மரத்தடி பஞ்சாயத்து சிஸ்டம் கொண்டு வரலாம்.


G SANKAR Ram
அக் 13, 2025 18:22

பிள்ளைகள் மேல் பாசத்தை கொட்டிய எத்தனையோ அப்பாகள்? திருவண்ணாமலை கிரி வலபாதையில் பிச்சை எடுக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?


J. Vensuslaus
அக் 13, 2025 12:31

என்ன தீர்ப்பு இது என்று தெரியவில்லை. நிறைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இந்த காரியத்தைத்தான் செய்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் குற்றங்கள் எப்படி குறையும்? பாதிக்கப்பட்டவர்ளுக்கு நீதி எப்படி கிடைக்கும்?


முக்கிய வீடியோ