இறந்தவரின் உயிரணுவை செயற்கை கருத்தரிக்க வழங்கலாம்: மருத்துவமனைக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இறந்த தன் மகனின் உயிரணுவை செயற்கை கருத்தரிப்புக்கு வழங்க கோரி பெற்றோர் தொடர்ந்த வழக்கில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு டில்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.புற்றுநோய் பாதிக்கப்பட்டு, டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞர் சிகிச்சை பலனின்றி 2020-ம் ஆண்டு இறந்தார். பெற்றோர் வேண்டுகோளின்படி இளைஞரின் உயிரணுவை குளிருட்டப்பட்ட ஆய்வகத்தில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வந்தது.இந்நிலையில் வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிக்க வைக்க தங்கள் மகனின் உயிரணுவை ஒப்படைக்க கோரி மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினர். சட்டப்படி வழங்கிட மறுத்த மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றம் உத்தரவிட்டால் வழங்குவதாக தெரிவித்தது.இது தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் டில்லி அரசு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பலத்துறை அமைச்சகம் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டு, கடந்த 2022 நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. . இதில் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டு முறைப்படியும், வாடகை தாய் சட்டப்படி இறந்தவரின் உயிரணுவை வழங்கிடலாம் என அறிக்கை அளித்து.வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம்.சிங் பிறப்பித்த உத்தரவு, ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தன் மகன் வழி பேரக் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனடிப்படையில் இறந்த மகனின் உயிரணுவை வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிக்க கோரியதில் நியாயம் உள்ளது.ஒருவரின் இறப்பிற்கு பின் அவரது உயிரணு மூலம் மீண்டும் செயற்கை கருத்தரிக்க செய்வதற்கு இந்திய சட்டத்தில் தடை எதுவுமில்லை எனவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அறிக்கை கவனத்தில் கொண்டு இறந்த மகனின் உயிரணுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.