வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதுபோல் ரோடு சரியாக போட வில்லை குண்டும் குழியுமா இருப்பதை புகைப்படம் எடுத்து புகார் தெரிவித்தால் ஒவ்வொரு புகாருக்கும் 10 % இன்சூரன்ஸ் கட்டணத்தை மாநில அரசு கட்ட வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும்
புதுடில்லி: '' வாகனங்களுக்கு காப்பீடு கட்டும்போது, அந்த வாகனம் எத்தனை முறை போக்குவரத்து விதிகளை மீறியது என்பதை கணக்கில் கொண்டு பிரீமியம் தொகையை நிர்ணயிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'', என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு டில்லி கவர்னர் விகே சக்சேனா கடிதம் எழுதி உள்ளார்.நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து விதிமீறல்களும் நடக்கின்றன. இது குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதற்கு எந்த பலனும் இல்லை. அபராதம் விதித்தாலும் பயனும் இல்லை.போதையில் வாகனம் ஓட்டுவது, ஒரு வழிப்பாதையில் பயணம், கூடுதல் நபர்களுடன் பயணம் செய்தல், ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குதல் ஆகியவற்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.2022ம் ஆண்டில் மட்டும் 4.37 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன.1.55 லட்சம் பேர் இதில் உயிரிழந்துள்ளனர். அதில் அதிவேகத்தில் பயணித்ததில் 70 சதவீதம் பேர். சிக்னல்களில் சிவப்பு விளக்கை மீறி நிற்பதும் அதிக விபத்தும் நடப்பதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு டில்லி கவர்னர் விகே சக்சேனா கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: வாகன ஓட்டிகளின் நடத்தை, வாகன காப்பீடு பிரீமியத்தில் எதிரொலிக்க வேண்டும். அதிவேகமாகவும், அபாயகரமானதாகவும் வாகனங்களை இயக்குதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் அதிக காப்பீடு செலுத்த வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் இந்திய சாலைகளில் பாதுகாப்பாக வாகனம் இயக்க வழிவகை செய்வதுடன், பொறுப்பாக வாகனம் இயக்கும் கலாசாரம் உருவாகும். இதுபோன்ற நடைமுறைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் அங்கு விபத்துகள் குறைந்ததுடன், பலரின் உயிரை காத்தது. காப்பீடு உரிமைகோரலை வரைமுறைப்படுத்தியது. இவ்வாறு அந்த கடிதத்தில் சக்சேனா கூறியுள்ளார்.
அதுபோல் ரோடு சரியாக போட வில்லை குண்டும் குழியுமா இருப்பதை புகைப்படம் எடுத்து புகார் தெரிவித்தால் ஒவ்வொரு புகாருக்கும் 10 % இன்சூரன்ஸ் கட்டணத்தை மாநில அரசு கட்ட வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும்