அர்ப்பணிப்பு தலைமை!
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் உறுதியான கொள்கையை அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த உரை, 140 கோடி இந்தியர்களின் கூட்டு உணர்வு. தேசிய நலனில் உறுதியான, தொலைநோக்கு அர்ப்பணிப்புள்ள தலைமைக்கு நான் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வலுவான தலைமையின் கீழ் நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது.ரேகா குப்தாமுதல்வர்துணிச்சலுக்கு பாராட்டு!
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் போல உலகில் வேறு எந்தத் தலைவரும் இவ்வளவு உறுதியாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதில்லை. எதிரி இலக்குகளை அவர் சுட்டெரித்தார். அவர்களின் அணு ஆயுதத் தாக்குதல்களை முறியடித்தார். எதிர்காலத்துக்கான ராஜதந்திர முயற்சிகளை அழகாக முன்னெடுத்துள்ளார். 'ஆப்பரேஷன் சிந்துார்' ஒரு புதிய உலகளாவிய அளவுகோலை அமைத்துள்ளது!விஜேந்தர் குப்தா,சபாநாயகர்