உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மான் இறைச்சி விற்றவர் கைது

மான் இறைச்சி விற்றவர் கைது

ஆனேக்கல் : ஆனேக்கல்லில் மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்ஆனேக்கல் தாலுகா, ராகிஹள்ளியைச் சேர்ந்த சந்தோஷ், 36. அவரது நண்பர் மகாதேவ். இவர்கள் இருவரும் கனகபுரா, கொள்ளேகால், தமிழக வனப்பகுதிகளில் உள்ள மான்களை கடந்த சில மாதங்களை வேட்டையாடி வந்துள்ளனர்.வேட்டையாடிய மான்களின் இறைச்சிகளை, விற்பனை செய்வதன் மூலம் கல்லா கட்டி வந்துள்ளனர். மான் கிடைக்காத நேரத்தில், வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்துள்ளனர்.இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, பன்னர்கட்டா வனவிலங்கு மண்டல வன அதிகாரி அந்தரகட்டி தலைமையில் விசாரணை நடத்ததப்பட்டது. விசாரணையில், சந்தோஷ் பிடிபட்டார்.அவரிடமிருந்து 8 கிலோ மான் இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி, நாட்டு துப்பாகிகள் பறிமுதல் செய்யப்படன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள மகாதேவை, அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை