உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதூறு வழக்கு: குற்றம் செய்யவில்லை என ராகுல் மனு

அவதூறு வழக்கு: குற்றம் செய்யவில்லை என ராகுல் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் செய்யவில்லை என நீதிமன்றத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், 2023 மார்ச்சில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சுதந்திர போராட்ட வீரர், வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசியதாக, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து, மஹாராஷ்டிராவின் புனே போலீசில், வீர் சாவர்க்கர் பேரன் சத்யாகி புகார் அளித்தார்.இதன்படி ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, புனேயில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி அமோல் ஷிண்டே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் நேரில் இருந்து ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நான் குற்றம் செய்யவில்லை எனக்கூறி, வழக்கறிஞர் மூலம் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆனந்த்
ஜூலை 12, 2025 02:47

விரைவில் விசாரணை முடிக்க வேண்டும்


தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2025 23:56

ராகுல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். கோர்ட்டில் கூப்பிட்டால், மன்னிப்பு கேட்கிறார். ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் மட்டுமே திருந்துவார். இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் என்று நிரூபிக்க வேண்டியதருணம் வந்துவிட்டது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 08:24

குழந்தை உளறினால் அவர்மேல் அவதூறு வழக்கு போடுவீர்களா ,,உங்களுக்கு இரக்கமில்லையா ? ஒரு பச்சை குழைந்தைக்கு ..கைப்பிள்ளைக்கு இவ்வளவு தொந்தரவு கொடுத்து இந்த பாடு படுத்துகிறீர்களே .. நியாயமா ?


subramanian
ஜூலை 11, 2025 22:23

சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசிய அனைவரும் குற்றவாளி. பாரத நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்த மகாத்மா சாவர்க்கர் .


முக்கிய வீடியோ