உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தேங்கி கிடக்கும் என்.ஐ.ஏ., வழக்குகள் கூடுதல் நீதிமன்றங்களை அமைக்க கெடு

 தேங்கி கிடக்கும் என்.ஐ.ஏ., வழக்குகள் கூடுதல் நீதிமன்றங்களை அமைக்க கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- டில்லி சிறப்பு நிருபர் - 'தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் தேச பாதுகாப்பு தொடர்பான நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுதும் நிலுவையில் உ ள்ள என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் தேச பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க, மாநிலங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அந்த வகையில், ஒரு உயர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால், இரு நீதிமன்றங்களும்; 25க்கும் அதிகமான வழக்குகள் இருந்தால், மூன்று நீதிமன்றங்களும் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு மற்ற கூடுதல் பணிகளை ஒதுக்கக் கூடாது. தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். பிரதி மாதம் குறைந்தது ஒரு வழக்கிலாவது இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களுக்கான இடவசதி, ஊழியர்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான நிதியை, மத்திய அரசு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக ஒதுக்க வேண்டும். மாநில உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, பிரத்யேகமான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ