உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்ஆத்மி அள்ளி வீசிய 15 தேர்தல் வாக்குறுதிகள் இவை தான்!

ஆம்ஆத்மி அள்ளி வீசிய 15 தேர்தல் வாக்குறுதிகள் இவை தான்!

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ ரிக்ஷா, டாக்சி மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுனர்களின் மகள்களின் திருமணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம் என ஆம்ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது; பிப்., 8ல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை, இன்று (ஜன.,27) டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். அவர் வெளியிட்ட 15 வாக்குறுதிகள் பின்வருமாறு: 1. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.2. ஒவ்வொரு பெண்களுக்கு மாதம்தோறும் வங்கி கணக்கில் ரூ.2100 செலுத்தப்படும்.3. 60 வயதுக்கும் மேற்பட்டோர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.4. குடிநீர் கட்டணம் தள்ளுபடி செய்வோம்.5. 24 மணி நேரமும் இலவச குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.6. ஐரோப்பாவில் உள்ளதைப் போல் சாலைகள் அமைக்கப்படும்.7. யமுனையை சுத்தம் செய்வோம்.8. அம்பேத்கர் உதவித்தொகை திட்டம்.9. மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம், டில்லி மெட்ரோவில் சலுகை10. அர்ச்சகர்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.11. குத்தகைதாரர்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படும்.12. கழிவுநீர் செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.13. ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.14. ஆட்டோ ரிக்ஷா, டாக்சி மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுனர்களின் மகள்களின் திருமணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம். அவர்களின் குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.15. குடியிருப்பு நல சங்கங்கத்தினருக்கு தனியார் பாதுகாப்பு காவலர்கள் ஏற்பாடு செய்து கொடுப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜன 27, 2025 21:16

திமுகவினரை மிஞ்சிவிட்டார்கள் இந்த ஆம்ஆத்மி கட்சியினர். வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அதுவும் இந்தியாவில்?


VENKATASUBRAMANIAN
ஜன 27, 2025 19:06

அவர் வீட்டிற்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்ய படப்படும்.இதையும் ஒரு வாக்குறியாகசேர்க்கலாம்.


angbu ganesh
ஜன 27, 2025 16:28

ஜெயிச்ச உடன் அது நாரா வாய்ன்னு இங்க ஒருத்தன் சொல்லிட்டு திரியரான் அதே மாதிரிதான் இவனும்


சமீபத்திய செய்தி