உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு: மற்றொரு பயங்கரவாதி கைது

டில்லி குண்டுவெடிப்பு: மற்றொரு பயங்கரவாதி கைது

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8 வது பயங்கரவாதி இவன் ஆவான்.கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகேயுள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்புடைய உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல்பலாஹ் பல்கலையில் பணியாற்றும் டாக்டர் உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mkgkvrn6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பிலால் நசீர் மல்லா என்பவனை கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
டிச 10, 2025 04:16

ராக்கெட் வேகத்தில் விசாரணை செய்து தூக்கில் போடுவது மிக அவசியம்.


V K
டிச 09, 2025 22:06

எல்லாரையும் தூக்கில் போடுங்க அப்போ தான் புத்தி வரும்


Ramesh Sargam
டிச 09, 2025 21:18

இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைத்ததா? இப்படியே கைது செய்து எத்தனை நாட்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் அந்த அயோக்கியர்களுக்கு சோறு போடுவீர்கள்? சட்டத்தை திருத்தவே மாட்டீர்களா?


Skywalker
டிச 09, 2025 21:15

All arrested must be severely punished. No tolerance for terrorism


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை