உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காற்று மாசுபாட்டால் தவிக்கும் தலைநகர் டில்லி

காற்று மாசுபாட்டால் தவிக்கும் தலைநகர் டில்லி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்காக 21 அம்ச செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக 4வது நாளாக காற்று மாசுபாடு அதிகமாக இருந்து வருகிறது. தலைநகர் டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு சராசரியாக 285 ஆக உள்ளது.குறிப்பாக, 13 இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அசோக் விஹார், துவர்கா செக்டர் 8, பத்பர்கஞ்ச், பஞ்சாபி பாக், ரோஹினி பாவனா, புராரி, ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, நரேலா, ஒஹ்லா பேஸ் 2, விவேக் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு 300ஐ தாண்டியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு, அதில் கலந்துள்ள முக்கிய மாசுபொருட்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு நிர்ணைக்கப்பட்டுள்ளது.

காற்று தரக்குறியீடு

பூஜ்யம் முதல் 50 - சிறப்பு51 முதல் 100 வரை - திருப்திகரமானது101 முதல் 200 வரை - மிதமானது201 முதல் 300 வரை - மோசமானது301 முதல் 400 வரை - மிகவும் மோசமானது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nagendhiran
அக் 18, 2024 12:44

முதல்வருக்கு மட்டும் தெரியட்டும் அப்புறம் பாருங்க நடவடிக்கையை?


Ramesh Sargam
அக் 18, 2024 12:13

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததிலிருந்தே ஆட்சியில் மாசு. காற்று மாசு, ஆட்சி மாசு ரெண்டுமே மிகவும் ஆபத்தானவை.


raju
அக் 18, 2024 09:56

அக்கா தமிழிசை. சென்னை வெள்ளத்தை பற்றி பேசுறங்க அதேபோல இந்த மாசு மோசமாவதை பற்றி 13 வருடம் ஆட்சியில் இருப்பவரிடமும் கேட்கணும்


ஆரூர் ரங்
அக் 18, 2024 10:53

மாசுக்கு முக்கிய காரணம் பஞ்சாபில் விவசாயிகள் எரிக்கும் லட்சம் டன் வைக்கோல் புகை.. மாடுகளுக்கு கொடுக்காமல் எரித்து அழித்து விடுகிறார்கள்.( அப்போதுதான் அடுத்த போக சாகுபடியை உடனடியாக துவக்க முடியும்). இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது டெல்லி பஞ்சாப் இரண்டையும் ஆளும் துடைப்பம். போலி விவசாயப் போராட்டம் நடத்திய அதே கட்சி விவசாயிகளைப் பகைத்துக் கொள்ளுமா?.


ran
அக் 18, 2024 09:40

இயற்கையாக வரும் மூடுபணியை காட்டி காற்று மாசு மாசு என்பது வடிகட்டிய பொய். செப்டம்பர் நவம்பர் டிசம்பர் மூன்று மாதங்களும் டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இத்தகைய மூடுபனி நிலவுவது வாடிக்கை.இது தீபாவளியை சீர்குலைப்பதற்கான ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் சதி வேலையில் ஒரு பகுதியே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை