உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் போலீசார் என்கவுன்டர்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை

டில்லியில் போலீசார் என்கவுன்டர்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை பிரபல ரவுடி கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். தலைநகர் டில்லியில் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி என்ற கும்பலுக்கும், மற்றொரு ரவுடியான டில்லு தாஜ்புரியா கும்பலுக்கும் இடையே தீராத பகை உண்டு. இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியது உண்டு.இந்த இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்கும் முயற்சியில் டில்லி போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், டில்லியின் ரோகிணி காவல்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மர்ம நபர்கள் சில பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவர்கள் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் போலீசார் அங்கு சென்றனர். ரவுடி கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மர்ம நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.பதிலுக்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், 2 பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். ஆயுதங்களுடன் 3 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கி இருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் இர்பான், நிலேஷ் மற்றும் லாலு என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சிக்கியவர்கள் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி என்பவனின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. சம்பவ பகுதி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தப்பியோடியவர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venugopal S
செப் 20, 2025 20:33

போலீஸ் என்கவுண்டர் என்ற பெயரில் நாலு அப்பாவி சங்கிகளை இது போல் போட்டுத் தள்ளினால் தான் இது போன்ற அநீதிகளுக்கு வக்காலத்து வாங்குவதை சங்கிகள் நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது!


Rathna
செப் 20, 2025 11:56

ரௌடிகளை அடக்கியதில் UP மாடல் தான் முதல் தரம். இல்லா விட்டால் அங்கே அதிகம் உள்ள அமைதி வழி மர்ம நபர் ஒரு சாதி - ஒரு மதம் சார்ந்த அழிவு கூட்டணியை அழிக்க முடியாது. தவறு செய்தவனை காலில் சுட்டு பிடிப்பதை யோகி ஆரம்பித்தார்.


ராஜ்
செப் 20, 2025 10:27

தமிழ் நாட்டில் உள்ள ஸ்னேக் பாபு தான் பெரிய ரவுடி


KOVAIKARAN
செப் 20, 2025 10:26

மற்ற மாநில காவல்துறையில் உள்ளது போல, தமிழக காவல்துறையில் encounter specialists யாரும் இல்லை. அப்படியே யாராவது இருந்து செயல்பட்டால், கழகக் கண்மணிகளை சேர்ந்த ஒரு ரவுடி கும்பல் அந்த போலீசையே encounter ல் போட்டுத்தள்ளிவிடும்.


V Venkatachalam
செப் 20, 2025 09:50

டில்லி போலீஸ், கிரேட். யூ ஆர் வெல் கம் டு தமிழ்நாடு. எ. துப்பாக்கியை நீட்டினால் தான் அடக்க முடியும். கட்டு மரம் வளர்த்து விட்டதை. ப்ளீஸ. உடனே வாங்க.


Moorthy
செப் 20, 2025 09:35

டில்லியின் அருகாமை எல்லையில் ஹரியானா, உபி மற்றும் ராஜஸ்தான். ஹரியானாவில் பயில்வான்கள் என்று சொல்லப்படும் தாதா கூட்டங்கள் அதிகம்.மல்யுத்தம் ஒரு பிரபலலான விளையாட்டு. முன்னாள் ஒலிம்பிக் தங்கம் வென்ற வீரர் தற்போது சிறையில் கொலை வழக்கில் கனடா மற்றும் துபாய் இல் இருந்து இயங்கும் தாதாக்கள் ஒரு புறம். திஹார் சிறையில் இருந்து இயங்கும் ரவுடி கூட்டம் மறுபுறம்.... இவர்களை கட்டுப்படுத்த என்கவுண்டர் ஒன்றே வழி


Ramesh Sargam
செப் 20, 2025 09:31

அந்த காவலர்களை உடனே சென்னைக்கு ஸ்பெஷல் transfer செய்யவும். Chennai யில் உள்ள எல்லா ரவுடிகளையும் சுட்டுத்தள்ளட்டும். அப்படி செய்தால் திமுக என்கிற கூட்டமே மொத்தமா அழிந்து போய்விடுமே? அழியட்டும்.


MARUTHU PANDIAR
செப் 20, 2025 09:18

சாராய கொள்ளைகாரன் அமெரிக்க சிஐஏ ஏஜெண்டு தேசத்துரோகி வளர்த்து விட்ட கழுதைகள் இன்னும் எத்தனையோ.


Moorthy
செப் 20, 2025 08:59

உபி முதல்வர் யோகிஜியின் என்கவுண்டர் ஆக்க்ஷன் மட்டுமே ரவுடி கும்பலை கட்டுப்படுத்த முடியும் கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் திஹார் சிறையில் இருந்துகொண்டே செயல்படும் தாதாக்களை கட்டுப்படுத்த யோகிs மெடிசின் தான் சரியான தீர்வு


சமீபத்திய செய்தி