உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நுரைநுரையாய் பொங்கிய யமுனை; நாளுக்கு நாள் மோசமாகும் டில்லி நிலைமை!

நுரைநுரையாய் பொங்கிய யமுனை; நாளுக்கு நாள் மோசமாகும் டில்லி நிலைமை!

புதுடில்லி: தலைநகர் டில்லியில் நிலவி வரும் மோசமான மாசுபாடு காரணமாக, யமுனை ஆறு, ரசாயன நுரை பொங்கிய படி காட்சியளிக்கிறது. ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அறுவடைக்கு பின்னர் எஞ்சிய விவசாய கழிவுகளை எரிப்பது வழக்கம். அதனால் உண்டாகும் புகை தலைநகர் புதுடில்லியின் சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் காற்றின் தரம் மாசடைவதால் ஏராளமானோர் உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.டில்லியில் இன்று)அக்.18) காற்றின் மாசு அளவானது 293 என்ற புள்ளியில் இருக்கிறது. ஆனந்தவிஹார் பகுதியில் இதுவே 339 புள்ளிகளாகவும், துவாரகா பகுதியில 325 புள்ளிகளாகவும் பதிவாகி உள்ளது. இது மிகவும் மோசமான அளவாக பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.இந் நிலையில், யமுனை ஆற்றில் நுரை பொங்கிய படி காணப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தண்ணீர் எங்குமே தெரியாத வண்ணம், முழுவதும் நுரை பொங்கியபடி யமுனை இருக்கும் காட்சிகள் அதில் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு உள்ளன. எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும், நீரே இருப்பது தெரியாமல், மேகக்கூட்டம் போல நுரை பொங்கிய யமுனை காட்சியளிக்கிறது. யமுனை நீரில் அதிகளவு ரசாயனங்கள் கலந்திருப்பதால் உடல் ஒவ்வாமை, சருமம் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காற்றின் மாசு குறியீட்டை குறைக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் ஸ்பிரே மூலம் காற்றில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ