உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானப்படை அதிகாரி கடிதத்தால் டில்லி சாமியார் சிக்கினார்

விமானப்படை அதிகாரி கடிதத்தால் டில்லி சாமியார் சிக்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:படிப்பு உட்பட பல்வேறு விஷயங்களை காரணம் காட்டி மாணவியரை மிரட்டி, டில்லி சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விமானப்படை அதிகாரி ஒருவரின் கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, மேலாளராக இருந்த பார்த்தசாரதி எனும் சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், பல மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் தலைமறைவானார். நிறுவன வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சாமியார் மீதான புகார் உறுதியானது. இதையடுத்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் கூறப் படுவதாவது: கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் சைதன்யானந்த சாமியாரின் கொடுமைகள் குறித்து மாணவி ஒருவர் மற்றும் கல்லுாரியில் பயிலும் மற்றொரு மாணவியின் தந்தையான விமானப்படை அதிகாரி ஒருவர் ஸ்ரீ சாரதா பீடத்துக்கு கடிதங்களை அனுப்பினர். டில்லி உயர் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவியர் சிலரின் பெற்றோர் விமானப்படையில் பணிபுரியும் நிலையில், டில்லி விமானப்படை தலைமையகத்தில் இருந்தும் புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, டில்லி கல்லுாரிக்கு சென்ற ஸ்ரீ சாரதா பீடத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவியரிடம் விசாரணை நடத்தினர். இதில், இரவு நேரங்களில் மாணவியரை சாமியார் தன் அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது. மறுப்பு தெரிவிக்கும் மாணவியரின் கல்வியை அவர் சீர்குலைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கல்லுாரி வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. புகார் தெரிவித்த 32 மாணவியரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 16 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெறப் பட்டது. இதில், பலமுறை வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், மாணவியரை வலுக்கட்டாயமாக மிரட்டி தன்னுடன் சைதன்யானந்த சாமியார் அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. சாமியார் மாணவியருக்கு அனுப்பிய ஆபாச குறுந்தகவல்கள், படங்கள் உள்ளிட்டவை ஆதாரமாக பெறப்பட்டன. இந்த விவகாரத்தில், சாமியாருக்கு உடந்தையாக இருந்த கல்லுாரி துணை முதல்வர் ஸ்வேதா உட்பட மேலும் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சாரதா பீட கல்லுாரிக்கு உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, சைதன்யானந்த சாமியாரை கல்லுாரி நிர்வாகத்தின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ள ஸ்ரீ சாரதா பீடம், 'அரசின் கீழ் கல்லுாரி இயங்குவதால், படிப்பு குறித்து மாணவியரோ, பெற்றோரோ கவலைப்பட வேண்டாம்' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Pandi Muni
செப் 27, 2025 07:44

சினிமாத்துறைதான் கேடு கெட்டவர்களால் கெட்டு சீரழிந்தது என்றால், கல்வித்துறையும் கலவித்துறையானதே கொடுமையிலும் கொடுமை.


Padmasridharan
செப் 26, 2025 20:33

சீருடைக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. இங்கே சென்னை திருவான்மியூர், காவலர்கள் கடற்கரையில் மக்களை அநாகரிகமாக பேசுவதும், அடிப்பதும் நடக்கின்றது.


Haja Kuthubdeen
செப் 26, 2025 17:29

குறிப்பிட்ட ஒரு மதத்தை தகாதவார்த்தைகளை சொல்வதை அனுமதிக்கும் அதற்கு பதில் கருத்தை மட்டும் புறக்கனிப்பதா????


மாபாதகன்
செப் 29, 2025 12:55

இவுனுங்க எப்பவுமே இப்படித்தான்?? இவுனுங்க கருத்துரிமை லட்சணம் இதுதான்.


M.Sam
செப் 26, 2025 15:40

இந்த மாதிரி உண்டு கொழுத்து பெறுதல் மேற்படி சமாசாரம் உம்மை விடாது அதுனால அய்யா ஆட்டிட்டாரு ஹிந்துமதத்தி சாபக்கேடுகளில் இதுவும் ஓன்று ன்னும் பண்ண முடியாது


K V Ramadoss
செப் 26, 2025 13:02

இவர் எங்கே எப்போது சாமியார் ஆனார் ? சிருங்கேரி மடத்தில் அவ்வளவு சுலபமாக எவருக்கும் சந்நியாச தீக்ஷய் கிடைக்காது. ,,இவர் எப்படி இந்த நிறுவனத்தின் டைரெக்டர் ஆனார் ? முழு விவரமும் தெரிய வேண்டும்..


Ramalingam Shanmugam
செப் 26, 2025 12:02

PURELY TOOL KIT


Rathna
செப் 26, 2025 11:01

கேரளாவில், இத்தாலியில், அரேபியாவில் பல புத்தகமே போட்டுருக்காங்க மடங்கள் தனது காலம் காலமாக வரும் உளவார பணி, கோவில்களை பராமரித்தல், சமூகத்திற்கு வழி காட்டுதல் என்பதை விட்டு பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுவதே இதற்கு காரணம். இதில் தமிழ் நாட்டு மடங்களும் அடங்கும். ஒவ்வரு சமூகத்திற்கும் பிறப்பில் இருந்து இறப்பு வரை மத நிறுவனங்கள் 200 ஆண்டுகள் வரை வழி காட்டி வந்தன. அவை நின்று போனது. வயலில் விளைச்சலை பார்த்தோமா, தனது குடும்பத்திற்கு கமிஷன் குடுத்தோமா, அரசியலில் ஈடுபட்டோமா என்று சாமியார்கள் இறங்கி போய் உள்ளனர். ஒரு சந்நியாசி உணவை கட்டாவிட்டால் புலன்களை அடக்க முடியாது


Ganapathy Subramanian
செப் 26, 2025 09:09

பள்ளியின் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது. அது பங்குத்தந்தையாக இருந்தாலும் சரி, மௌல்விகளாக இருந்தாலும் சரி, இல்லை காவி உடை தரித்தவர்களாக இருந்தாலும் சரி. குழந்தைகள் அவர்களை கடவுளின் உருவங்களாக நினைத்து பணிவிடை செய்யப்போகிறோம்


Moorthy
செப் 26, 2025 08:27

மாணவிகளின் கல்வியுடன் விளையாடும் பல கல்வி நிறுவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் சீர்திருத்தங்களை நடைமுறை படுத்த வேண்டும்.. துவக்க பள்ளி தொடங்கி முதுநிலை வரை அரசு ,தனியார் என்ற எந்த பாகுபாடும் இன்றி பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வேட்டையாடும் கும்பல்கள் கல்வி நிலையங்களில் அதிகரித்து விட்டது ... மார்க் போடமாட்டேன், fail ஆக்கி விடுவேன் என்று பயமுறுத்தி மாணவ, மாணவிகளின் எதிர் காலத்தோடு மிருகங்களுக்கு எதிராக அரசு செயல்பட வேண்டிய நேரமிது


Moorthy
செப் 26, 2025 08:17

மஹா மஹா ஸ்ரீ ஆதி சங்கரர் தோற்றுவித்த சாரதா பீடத்தில் இது போன்ற புல்லுருவிகளுக்கு இடம் கொடுக்க கூடாது..


முக்கிய வீடியோ