உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தற்கொலைப்படை தாக்குதல் வழக்கு: மற்றொரு முக்கிய பயங்கரவாதி கைது

டில்லியில் தற்கொலைப்படை தாக்குதல் வழக்கு: மற்றொரு முக்கிய பயங்கரவாதி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு முக்கிய பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.டில்லியின் செங்கோட்டை அருகே கடந்த மாதம் 10ம் தேதி மாலை 6:52 மணியளவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை டாக்டர்கள் உட்பட 8 பயங்கரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கில் 9வது குற்றவாளியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த யாசிர் அகமது தர் என்பவனை டில்லியில் வைத்து கைது செய்யப்பட்டான்.கார் குண்டுவெடிப்பு சதியில் யாசிர் அகமது தர்ருக்கு முக்கிய பங்கு இருந்ததுடன், அதற்காக அவன் தீவிரமாக பணியாற்றியதையும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது என உறுதிமொழி ஏற்றதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய உமர் உன் நபி மற்றும் மற்றொரு குற்றவாளி முப்தி இர்பான் ஆகியோருடன் இவன் தொடர்பில் இருந்துள்ளதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kalyanasundaram Linga Moorthi
டிச 19, 2025 02:59

slaughter them with hacksaw blade no behind the bars


RAMESH KUMAR R V
டிச 18, 2025 21:40

தண்டனை என்பது நினைத்து பார்க்காத தரத்தில் இருக்க வேண்டும்.


Nagarajan D
டிச 18, 2025 20:08

கைது செய்வதோடு நிற்காமல் அவங்கள 72 கண்ணிகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் அவனுங்க அங்கே சென்று சந்தோஷமாக இருக்கட்டும்


Ramesh Sargam
டிச 18, 2025 19:51

கைது கைது கைது இதைத்தவிர தண்டனையே இல்லையா? பயங்கரவாதி என்று தெரிந்தபின்பும் ஓடவிட்டு சுட்டுத்தள்ளுவதை விட்டுவிட்டு கைது செய்வதால் மட்டும் என்ன பயன்? ஓஹோ, வழக்கு பதிவு செய்யவேண்டும், விவாதம் நடக்தவேண்டும், முடிவில் ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யவேண்டும். நாசமாப்போக நமது சட்டங்கள்.


Sudha
டிச 18, 2025 19:32

டெல்லி யை விட்டு வேறு தலைநகர் தேடுங்கள், ராசியில்லாத நரகம்


சமீபத்திய செய்தி