உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெங்கு, சிக்குன்குனியா தயாராகும் தடுப்பூசிகள்

டெங்கு, சிக்குன்குனியா தயாராகும் தடுப்பூசிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியாவில், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொசு வாயிலாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. 2024ல், 2.34 லட்சம் பேருக்கு டெங்கு ஏற்பட்ட நிலையில், 297 பேர் உயிரிழந்தனர். இதேபோல், அந்த ஆண்டில், 1.92 லட்சம் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ராஜேஷ் சுதிர் கோகலே டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:டெங்கு தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. சிக்குன் குனியா தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனை நிறைவடைந்து, தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.டெங்கு, சிக்குன்குனியா தடுப்பூசிகள் தொடர்பாக மத்திய அரசு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் அவை சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

புரொடஸ்டர்
ஜூன் 24, 2025 08:55

கொரோனா தடுப்பூசி பல பாதிப்புகள் ஏற்படுத்துவதை மருத்துவ ஆய்வுகள் அறிவித்துள்ளது. டெங்கு, சிக்கன் குனியா தடுப்பூசி மருந்துகள் மேலும் பாதிப்புகள் ஏற்படுத்துமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை