உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும்; ராஜ்நாத் சிங் பேச்சு

வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும்; ராஜ்நாத் சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியை 100% ஆக உயர்த்துவதை இந்தியா பரிசீலித்து வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்த புனிதமான நாசிக் பூமிக்கு வரும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு தெய்வீக பூமியில் இருப்பது போல் உணர்கிறேன். உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை 100% ஆக உயர்த்துவதே எங்கள் நோக்கம். இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.25 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது.ஒரு காலத்தில், நாடு தனது பாதுகாப்பு தளவாடங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற நாடுகளைச் சார்ந்திருந்தது. கிட்டத்தட்ட 65-70 சதவீத பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று, இந்த நிலைமை மாறிவிட்டது; இப்போது இந்தியா தனது சொந்த மண்ணில் 65% பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியைச் செய்கிறது.மிக விரைவில், எங்கள் உள்நாட்டு உற்பத்தியையும் 100% ஆக மாற்றுவோம். 2029ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் ரூ.3 லட்சம் கோடியையும், பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியில் ரூ.50,000 கோடியையும் அடைய நாங்கள் இப்போது இலக்கை நிர்ணயித்துள்ளோம்.வெளிநாட்டு ராணுவப் பொருட்களைச் சார்ந்திருப்பது ராஜதந்திர பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியை 100% ஆக மாற்ற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
அக் 18, 2025 09:05

இதே மாதிரி நம்ம தளவாடங்களை வாங்கும் நாடுகளும் யோசிச்சா?/


தம்பிரான்
அக் 17, 2025 22:53

ராணுவ பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்


Raja k
அக் 17, 2025 19:54

அப்போ எதுக்கு இப்போ இங்கிலாந்துடன் ஏவுகணை வாங்க 4100 கோடியில் ஒப்பந்தம் போட்டு இருக்கீங்க


aaruthirumalai
அக் 17, 2025 19:43

இத எப்பவோ ரீச் பண்ண வேண்டியது என்ன செய்வது. உணர்வு வேண்டும் நம் நாடு நம்ம மக்கள் என்று.


Amsi Ramesh
அக் 17, 2025 17:52

நாடு சுதந்திரம் அடைந்தபோது சுத்தமான இந்தியர்கள் கையில் ஆட்சி கிடைத்திருந்தால் எப்போதோ இந்த நாடு வல்லரசாக மாறியிருக்கும்.. நம் தலை விதி ஒரு குடும்ப வாரிசுகளிடம் சிக்கி தவித்திருக்கிறது .... இனி விடிவு காலம்தான் ஜெய் ஹிந்து


RAMESH KUMAR R V
அக் 17, 2025 17:37

ஏதிலும் சுதேசி அதுவே வருங்கால இந்தியாவின் வளர்ச்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை