உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அதிக கார்பன் உமிழ்வது வளர்ந்த நாடுகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

 அதிக கார்பன் உமிழ்வது வளர்ந்த நாடுகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடில்லி: “நம் நாட்டின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலக சராசரியில் பாதியை விட குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகள் இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமாக கார்பன் வெளியேற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில், வளரும் நாடுகள் மீது தவறாக பழி சுமத்தப்படுகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். 'சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு, டில்லியில் நேற்று தொடங்கியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 17 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: கார்பன் வெளியேற்றத்துக்கான பொறுப்பு, பெரும்பாலும் வளரும் நாடுகள் மீது தவறாக சுமத்தப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இன்றும் கூட இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்ற அளவு, உலகளாவிய சராசரியில் பாதியளவிற்கும் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளின் தனி நபர் கார்பன் வெளியேற்றம், இந்தியாவை விட ஆறு மடங்கு அதிகமாகவே உள்ளது. தரநிலைகள் இந்த உண்மையை உலகளாவிய தளங்களில் இந்தியா வலுவாக எடுத்துரைத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய தரநிலைகளை வகுக்க, பிற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் வளர்ச்சி விரைவானது மட்டுமல்ல, நிலையானதும் கூட. கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான ஒவ்வொரு துறையிலும், இந்தியா அசாதாரண முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த, 'சி.ஓ.பி., - 21' உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே நிறைவேற்றிய ஒரே 'ஜி 20' நாடு இந்தியா தான். புதைபடிவமற்ற எரிபொருள் பயன்பாடு, சூரிய ஆற்றல் திறன், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது என உலகம் முழுதும் இந்தியாவின் செயல்பாடு பேசப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி 2 கிகாவாட்டாக இருந்தது. தற்போது, அது 160 கிகாவாட்டை கடந்துள்ளது. மின்சக்தி தகடு பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, பல நாடுகளின் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு 80 ஆயிரம் ரூபாயை அரசு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் காற்றாலை மின்சக்தி உற்பத்தி திறன் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது; நீர்மின்சக்தி திறனும் உயர்ந்துள்ளது. அணுசக்தி உற்பத்தியிலும் நாடு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது. அதுவே, உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில். இது துாய எரிசக்தி போக்குவரத்து துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. கடந்த 2014க்கு முன், இந்தியாவில் ஆண்டுக்கு 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டில், 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவை, சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனளிக்கின்றன. தடை விதிப்பு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வட்ட பொருளாதாரத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது-. இந்தியாவில் இன்று தினமும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் பல நுாற்றாண்டுகளாக உலக நாடு களுக்கு இந்தியா வழிகாட்டி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 'தடையற்ற ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு' 'ரோஜ்கார் மேளா' நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: பல்வேறு நாடுகளுடன், 40 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், நம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கின்றன. நம் தொழில்முனைவோருக்கு புதிய கூட்டணிகளுக்கும், புதிய சந்தைகளுக்கும் இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன. உலகின் மூன்றாவது மிகப்பெரிய 'ஸ்டார்ட் அப்' சூழலை இந்தியா கொண்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெரிய நகரங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாமல், மற்ற நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளன. 2047ம் ஆண்டுக்குள், இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு. இந்த பயணத்தில் இளைஞர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Dv Nanru
செப் 20, 2026 12:08

வெளிநாடுகள் தங்கள் நாட்டின் மாசுபாட்டைக் குறைக்க இந்தியாவிற்குத் திருப்பிவிட்ட மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைப் பற்றிய விழிப்புணர்வும் நமக்குத் தேவை. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் தொழில்களை மறுபரிசீலனை செய்வதும், தூய்மையான ஆற்றல் தொழில்நுட்பங்களை நோக்கி மாறுவதுமே இந்தியாவின் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.


ஜெகதீசன்
செப் 20, 2026 11:36

ஆம். இதை கிளாஸ்கோ காலநிலை மாநாட்டிலும் வலியுறித்தினோம். அதோடு, அமெரிக்கா தனக்கு தேவையான 70% பொருட்களை இறக்குமதி செய்து, அதனால் ஏற்படும் கார்பன் உமிழ்வை உற்பத்தி செய்யும் கணக்கில் புட்டு விடுகிறது. இருப்பினும், 1976ல் காற்றில் 332 ppm ஆக இருந்த கரியமில வாயு 50 ஆண்டுகளில் இன்று 432 ppm ஆக உள்ளது. அதனால் தாவரங்கள் நன்கு வளர்கிறது, பெருகி வரும் ஜனத்தொகைக்கு உணவு கிடைக்கிறது. காற்றிலுள்ள பசுமை குடில் வாயுவில் 75% ஈரப்பதமே. காலநிலை காலம் காலமாக மாறிக்கொண்டே தான் இருக்கும். நாம் அதை கட்டுப்படுத்துவதாக நினைப்பது வீண் ஜம்பம்.


Dv Nanru
செப் 20, 2026 09:48

காலநிலை மாற்றமும் தொழில்துறை மாற்றமும்: வளரும் நாடுகளின் சவால்கள் உலகளவில் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், கார்பன் உமிழ்வு Carbon Emissions தொடர்பான பொறுப்புகள் குறித்து உலக நாடுகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.


sahayadhas
செப் 20, 2026 08:33

டாலர் 95rs வளர்த்துட்டே


thiru
செப் 20, 2026 11:24

பாவாடை கும்பலுக்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம் சகாயம்


Mayil Vahanan
செப் 20, 2026 18:19

சக இந்தியர் ஒருவர் இந்தியாவின் பொருளாதார பிரச்சனையை சொல்கிறார், அதற்கு தங்களிடம் பதில் இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம். அவர் மதத்தை கொச்சையாக பேசுவதுதான் தேசதுரோகம். பதிலுக்கு அவர் கொச்சையாக பேசினால், அதையும் இதுபோலவே இத்தளத்தில் வெளியிட்டால் இத்தளத்தின் மாண்பு குறையும்.


நிக்கோல்தாம்சன்
செப் 20, 2026 08:09

இலவசங்கள் கொடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்கள்


Mayil Vahanan
செப் 20, 2026 07:15

நாம் இயற்கையை தெய்வமாக வழிபடும் இந்தியர்கள் என்று யாரோ ஒருவர் முன்பு பேசினார். அவர் மனதிலிருந்து பேசினால் இப்போது இப்படி பேசமாட்டார். தலைநகர் டெல்லி நச்சு காற்று மண்டலமாக மாறியுள்ளது. அதைப்பற்றி நமக்கு என்ன கவலை. என்ன செஞ்சாலும் செய்யாவிட்டாலும் ஒட்டு விழுது. அப்புறம் எதையும் செய்யலாம், எதையும் பேசலாம்.


அப்பாவி
செப் 20, 2026 07:11

மோடி சொன்னது வளர்ந்த நாடுகளின் per capita consumption அதாவது தலைக்கு இத்தனை சக்தி. அவிங்க மக்கள் தொகை குறைவு. வருமானம் அதிகம்.


guna
செப் 20, 2026 11:25

அப்பாவி உனக்கு வருமானம் எப்படி.


அப்பாவி
செப் 20, 2026 06:02

ஆனாலும் நாங்களும் வளர்ந்த நாடாக கடுமையாக உழைக்கிறோம் ஹை.


guna
செப் 20, 2026 06:53

அப்பாவி போல வேலைவெட்டி இல்லாமல் இருப்பவனுக்கு ஜாலி ஹை... வூட்ல ஓசி சோறு கிடைக்கும் ஹை


khum
செப் 20, 2026 04:28

No good road, No good water, No good environment but talking like a maharaj. US tariff is on the way to punish you


guna
செப் 20, 2026 11:25

khum go to good country for begging


thala
செப் 20, 2026 12:50

first you can send your father and mother for begging . what khum says right