உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்திற்கு ரூ.34,200 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்திற்கு ரூ.34,200 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: குஜராத்திற்கு ரூ.34,200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று ( செப்டம்பர் 20) தொடங்கி வைக்கிறார்.குஜராத் மாநிலத்திற்கு நாளை பிரதமர் மோடி செல்கிறார். அவர் தொடங்கி வைக்க உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் இன்று காலை 10:30 மணியளவில் பாவ்நகரில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.34,200 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுவார்.பிரதமர் தோலேராவை வான்வழியாக ஆய்வு செய்வார். பிற்பகல் 1:30 மணியளவில், அவர் ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ளார். பின்னர் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைப் பார்வையிட உள்ளார். கடல்சார் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் ரூ.7,870 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். இந்திரா கப்பல்துறையில் மும்பை சர்வதேச கப்பல் முனையத்தை அவர் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Indian
செப் 20, 2025 06:59

இது போதாது தென் மாநிலங்களின் வரியை வசூலித்து இன்னும் ஒரு ஐம்பதாயிரம் கோடி திட்டங்கள் கொடுத்தா நல்ல இருக்கும்.


ராஜா
செப் 20, 2025 06:55

மாநில ஆளுநர் பதவி காலியாக உள்ளது


தாமரை மலர்கிறது
செப் 20, 2025 01:37

ஓட்டுபோடும் மாநிலங்களுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் மத்திய அரசு கொடுக்கும். ஒட்டு போடாவிடில் திருவோடு தான் ஏந்தனும் .


K.n. Dhasarathan
செப் 19, 2025 21:17

குஜராத்திற்கு 34,200 கோடி, தமிழகம் குறிப்பாக தூத்துக்குடி மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட போது 200 கோடி , அதுவும் 6 மாதம் கழித்து, அதுவும் கோர்ட்டுக்கு போக போறோம் என்ற பிறகு, எத்தனை பார பட்சம், எங்கள் பணம் எங்களுக்கு கிடைக்காது, அடுத்த மாநிலங்களுக்கு அள்ளி, அள்ளிகொடுப்பார், யார் வீட்டு பணம் ?


Muthuvel
செப் 19, 2025 21:26

we said go back Modi. so he go back to gujrat


Priyan Vadanad
செப் 19, 2025 21:01

அதானிக்கு இன்னுமா கடன் இருக்குது? அல்லது பணம் போதவில்லையா?


M.Sam
செப் 19, 2025 20:28

அதன் தலைவர் கொடுப்பதில் வியப்பு ன்றும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை