உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயலில் ரூ.60 கோடியில் வளர்ச்சி பணிகள்: ரூபகலா

தங்கவயலில் ரூ.60 கோடியில் வளர்ச்சி பணிகள்: ரூபகலா

தங்கவயல்: ''தங்கவயல் தொகுதியில் 60 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.ராபர்ட்சன் பேட்டையில் உள்ள நகராட்சி திடலில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. தேசியக் கொடியை தங்கவயல் எஸ்.பி., சாந்த ராஜு ஏற்றி வைத்தார். விழாவுக்கு தலைமை வகித்த ரூபகலா பேசியதாவது:தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவினர் உருவாக்கி வழங்கினர். இதில் சமத்துவத்தை அடிப்படை லட்சியமாகக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.நாட்டை பாதுகாப்பது ராணுவத்தினர். நாட்டுக்கு உணவளிப்பது விவசாயிகள். இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். கர்நாடக அரசு அமல்படுத்திய உத்தரவாத திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் பயன் அடைய உதவியது.குறிப்பாக பெண்கள், 2,000 ரூபாய் நிதியுதவியால் பயன் அடைந்து வருகின்றனர். இந்த அரசு மேம்பாட்டுக்காக உழைக்கிறது. தங்கவயல் தொகுதியில் 60 கோடி ரூபாய் நிதியில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாண.வர் படை, சாரணர் - சாரணியரின் அணிவகுப்பும் நடந்தது. மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி சிறப்பித்தனர்.தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார், நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, மருத்துவ தலைமை அதிகாரி சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை