உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்

அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்

ஆமதாபாத்: அமெரிக்காவுக்கு விசா கிடைக்க வேண்டும் என்று, ஆமதாபாதின் ஹனுமன் கோவிலில் வேண்டுதல் வைக்கும் மக்கள், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தரணும் என்றும் வேண்டிகொள்கின்றனர்.குஜராத்தின் ஆமதாபாதில் அமைந்துள்ளது சமத்காரி ஹனுமன் கோவில். இந்தக் கோவிலின் விசேஷம், ஹனுமனை மனமுருகி வேண்டிக் கொண்டால், உடனடியாக விசா கிடைத்து விடும். குறிப்பாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், இந்தக் கோவிலுக்கு வருவது சகஜம்.அதிர்ச்சிசாதாரணமாக இந்தக் கோவிலில், தினமும், 1,000 பேர் வருகை தருவர். விசா ஹனுமன் என்று அழைக்கப்படும் சமத்காரி ஹனுமனை தரிசிக்க தற்போது அதிகளவில் மக்கள் வருகின்றனர்; குறிப்பாக இளைஞர்கள் வருகை அதிகம்.அமெரிக்க அதிபராக, கடந்த மாதம், 20ம் தேதி பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். உடனேயே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளோரை வெளியேற்றுவது, வேலை பார்க்க வருவோருக்கான விசாவை குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவை அதிகம் பெறும் நாடுகளில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்புகள், அமெரிக்க விசாவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளன.நல்ல புத்திஎந்தப் பிரச்னையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் என்று விசா ஹனுமனிடம் கோரிக்கை வைக்க ஆயிரக்கணக்கானோர் இந்தக் கோவிலுக்கு படை எடுத்து வருகின்றனர்.தங்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்க டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்றும் வேண்டி கொள்கின்றனர்.இதுபோன்ற பல கோவில்கள் நாடு முழுதும் உள்ளன. வெளிநாடுகளுக்கு செல்ல நினைப்போர், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காக அங்கும் படை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M. PALANIAPPAN
பிப் 06, 2025 10:46

இட ஒதுக்கீடுதான் பெரும்பாலும் இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கு முக்கிய காரணம் தகுதி உள்ளவருக்கு வேலை என்ற நிலைமை வந்தால் ஏன் வெளிநாடு செல்கிறார்கள்?


Vathsan
பிப் 06, 2025 12:29

சரிதான். 3% மக்களுக்கு கொடுக்கப்படும் 10% EWS இட ஒதுக்கீட்டை நீக்கலாம்.


Columbus
பிப் 06, 2025 08:41

There is a Chilukur Visa Balaji on Hyderabad. One has to do 108 pradhakshinams before and after prarthana. It can be done in instalments. It is a privately managed temple by a devotee family. In existence for a long time. Very popular.


பெரிய குத்தூசி
பிப் 06, 2025 08:29

இந்திய மக்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் மெத்த படித்த லோக்கல் சிடிஸன் க்கு வேலை கிடைக்காமல் ஒரு நாளைக்கு 1 வேலை அல்லது 2 வேலை மட்டும் உணவு உட்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுள்ளார்கல். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றநாடுகள் பொருளாதார நசிவால் பணவீக்கத்தால் மக்கள் சிக்கி கழ்டபட்டுக்கொண்டு உள்ளார்கள். இந்தியர்களின் கனவு இந்தியாவிலிருந்து வெளிநாடு போய் படித்து அங்கேயே பாஸ்போர்ட் எடுத்து குடிமகன் ஆகவேண்டும் என்பது இப்போதுள்ள சூழ்நிலையில் விபரீத ஆசை. வெளிநாட்டில் வேலைபார்த்து பணம் சம்பாதிப்பது என்ற காலம் 2015க்கு முன்பே முடிந்து விட்டது. உள்ளூர் குடிமக்களுக்கு வேலை இல்லாமல் வெளிநாட்டினர் துன்பப்பட்டு கொண்டுள்ளனர். இந்தியர்கள் சிந்தனையை மாற்றி நீங்கள் போடும் ஓட்டை சரியான வளர்ச்சியை முன்னெடுக்கும் தலைவருக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றி இந்தியாவிலேயே சுயதொழிலை கவுரவமாக செய்து வாழக்கற்றுக்கொள்ளுங்கள். பணம் சம்பாதித்து இனி வெளிநாடுகளுக்கு 10-15 நாள் சுற்றுலா செல்லமட்டும் பழகிக்கொள்ளுங்கள். வெளிநாடுகளில் நீங்கள் நினைப்பதுபோல் வேலைவாய்ப்புகள் இல்லை. வெளிநாடுபோகும் 10 நபர்களில் ஒருவர் மட்டுமே ஷைன் செய்கிறார். ஆனால் அவருக்கும் எப்போது வேலை பறிபோகும் என தெரியாது.


Dharmavaan
பிப் 06, 2025 08:17

எல்லாம் வெளி நாடு செல்ல காரணம் ஒதுக்கீடு கலாச்சாரம்தான்


அப்பாவி
பிப் 06, 2025 07:44

இப்படித்தான் ஹைதராபாத்தில் விசா பாலாஜி கோவில்ல தெலுங்கு கூட்டம் அலைமோதும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 07:43

நல்ல புத்தி உங்களுக்குத்தான் தேவை ஆஞ்சநேய பக்தர்களே ......


VENKATASUBRAMANIAN
பிப் 06, 2025 07:29

எதற்காக இப்படி அலைகிறார்கள். இங்கே இல்லாத் வாய்ப்புகளா. தொழில் செய்ய கடன் கொடுக்கிறார்கள். நேற்று ஊடகங்களில் கம்யூனிஸ்டுகள் வக்காலத்து வாங்குகிறார்கள். கம்யூனிஸ்டுகள் ஆதரித்தால் அது உருப்படாது இதுதான் உண்மை. இந்தியா வில் எல்லா தொழிற்சாலைகளை மூடிய பெருமை அவர்களுக்கே சேரும்


Raj
பிப் 06, 2025 06:55

ஆஞ்சநேயர் என்ன அமெரிக்காவின் தூதரா, அவன் நாட்டின் விதிகளை அவன் மாற்றுகிறான். அவன் புத்திசாலியுடன் தான் இருக்கிறான், நாம் தான் முட்டாளாக இருக்கிறோம். நமது புத்திசாலிதனத்தை அவன் நாட்டிற்கு விற்றுவிடுகிறோம், பதிலுக்கு அவன் துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். ஒரு துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாட்டிற்கு செல்ல ஹனுமானை வேண்டுவது......... தான்.


Bye Pass
பிப் 06, 2025 21:33

கொண்டது விடா


Oviya Vijay
பிப் 06, 2025 05:54

பக்தர்களின் வீக்னஸை புரிந்து கொண்டு தாங்கள் கல்லா கட்டுவதற்காக கடவுள்களுக்கு விதம் விதமாக பெயரை வைத்து மக்களை மூட நம்பிக்கையினால் ஏமாற்றிக் கொண்டிருப்போரை என்னவென்று சொல்வது... ஹனுமான் மைண்ட் வாய்ஸ்: எனக்கு ஏன்டா விசா ஹனுமான்னு பெயர் வெச்சீங்க... நான் என்ன உங்களை எல்லாம் சஞ்சீவி மலையை அப்படியே தூக்குன மாதிரி அமெரிக்காவுக்கு தூக்கிட்டா போக முடியும்... ஏன்டா இந்த அட்டூழியம் பண்றீங்க... எத்தனை நடிகர் விவேக் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது டா...


கிஜன்
பிப் 06, 2025 05:30

அமெரிக்க மக்களுக்கு ஆஞ்சநேயர் நல்ல புத்தியை கொடுக்கப்போகத்தான் டிரம்ப் வந்திருக்கிறார் .... கோடிக்கணக்கான மக்கள் விசா இல்லாமல் வந்தால் அவரும் என்னதான் செய்வார் ... அவரவர் அவர்கள் நாட்டிலேயே உழைத்து வாழவேண்டியது தான் .... ஆயிரத்திற்கும் ...அண்டா குண்டா ... டிவி க்கெல்லாம் ஆசைப்படாமல் நல்லவர்களை தேர்ந்தேடுக்கவேண்டும் ....


அப்பாவி
பிப் 06, 2025 07:45

விசாவுக்காக குஜராத்தில்தான் அலைகிறார்கள். அங்கே அண்ட், குண்டா க்ய்டுப்பதில்லை. டபுள்.இஞ்சின் சர்க்கார் நடக்குது கோவாலு.


புதிய வீடியோ