உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகள்; பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகள்; பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள் மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த 'ஏர் இந்தியா' விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். இந்த விபத்து விமான பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், விமான விபத்தின் எதிரொலியாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மத்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உள்ளிட்ட அதிகாரிகள், ஏர் இந்தியா அலுவலர்களின் செயல்பாடுகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர்.இதில் குறிப்பிட்ட மூன்று அதிகாரிகள், தொடர்ந்து விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. கோட்ட துணை மேலாளர் சூரா சிங், பணி ஒதுக்கீடு செய்யும் பிரிவு தலைமை மேலாளர் பிங்கி மித்தல், திட்டமிடுதல் பிரிவு அதிகாரி பாயல் அரோரா ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.பணி ஒதுக்கீடு செய்தல், விதிமுறைகளை கடைப்பிடித்தல், பணியில் பொறுப்புடன் செயல்படுதல் ஆகியவற்றில் கவனமின்றி செயல்பட்டதாகவும், விதிகளை மீறியதாகவும் இவர்கள் கண்டறியப்பட்டனர்.''பணி நேரத்தில் கவன குறைவாக செயல்பட்ட அந்த மூன்று அதிகாரிகளையும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்'' என ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் நேரம் ஏதுக்கு?

''மே 16,17ம் தேதிகளில் பெங்களூரிலிருந்து லண்டனுக்கு சென்ற, இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் (Al133) 10 மணி நேரத்தில் சென்று அடைவதற்கு, பதில் கூடுதல் நேரம் ஆகி உள்ளது. இது குறித்து விமான நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரிக்கு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கான காரணத்தை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூன் 22, 2025 08:12

விபத்துக்கு நானே பொறுப்புன்னு ஒரு தலைமை அதிகாரி ஸ்டேட்மெண்ட் குடுத்தாரே? அவரை என்ப செஞ்சீங்க?


Sudha
ஜூன் 21, 2025 20:58

ஜஸ்ட் ஒரு வருடம் முன்பு ஏர் இந்தியாவின் நிலை என்ன? சாகப்போகும் நோயாளியை சில மருத்துவ மனைகள் டிஸ்சார்ஜ் செய்யுமே அந்த கதை தான்


Sudha
ஜூன் 21, 2025 18:47

அப்படியே மேல மேல போய், விற்பனைக்கு முன் நடந்த ஊழல்கள், கவனக்குறைவுகள் அனைத்தையும் புட்டு புட்டு வைக்க யாராவது வழி செய்யவும்.


Ravi Kumar
ஜூன் 21, 2025 15:20

பாதுகாப்பு அதிகம் உள்ள துறைகளில் இத போன்ற தூங்குமூதிகள் யார் கண்ணிலும் படாமல் தன் திமிரின் செயல் பாடுகளில் திளைக்கிறார்கள் ........ இது நடைமுறை உண்மை ..


Indian
ஜூன் 21, 2025 15:03

இது ஒரு சாம்பிள் தான். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் .. இந்தியா முழுக்க நிறைய பேர் இருக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 15:00

முன்னர் அரசுடைமை நிறுவனமாக இருந்தபோது பயிற்சி எடுத்து பணியிலிருந்தவர்கள்தானே?. யார் யாரைக் குறை கூறுவது?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை