உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைர வியாபாரியின் ரூ.46 கோடி சொத்துக்களை ஏலம் விட அனுமதி

வைர வியாபாரியின் ரூ.46 கோடி சொத்துக்களை ஏலம் விட அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 46 கோடி ரூபாய் சொத்துக்களை ஏலம் விட மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மெஹுல் சோக்சி, நிரவ் மோடி. வைர வியாபாரிகளான இருவரும் உறவினர். இவர்கள் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர். இது தொடர்பாக சி.பி .ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பினார். அங்கிருந்து, ஆன்டிகுவா தப்பிய சோக்சியை ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் வங்கி மோசடியில் தொடர்புடைய கீதாஞ்சலி நிறுவன உரிமையாளர் சோக்சியை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அமலாக்கத்துறை அறிவித்தது. இதையடுத்து கீதாஞ்சலி ஜெம் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளி கட்டிகள் உட்பட 46 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 சொத்துக்களை ஏலம் விட, சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்து கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது. இதில், மும்பை போரிவலியில் உள்ள 2.6 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள், பாந்த்ரா குர்லாவில் உள்ள 14 கார் நிறுத்தத்துடன் கூடிய 19.7 கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத் வைர நிறுவனம் ஆகியவை அடங்கும். ஏலம் விடப்பட்ட தொகையை, நீதிமன்றம் பெயரில் வங்கியில் பிக்சட் டிபாசிட்டாக செலுத்தவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !