உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான விடுதியில் தகராறு செய்தவரை கடத்தினாரா நடிகை லட்சுமி மேனன்?

மதுபான விடுதியில் தகராறு செய்தவரை கடத்தினாரா நடிகை லட்சுமி மேனன்?

கொச்சி: கேரளாவின் கொச்சியில் இளம் ஐ.டி., ஊழியரை கடத்திச் சென்ற சம்பவத்தில், நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தல் தொடர்பாக லட்சுமி மேனனின் நண்பர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் லட்சுமி மேனன். கேரளாவில் உள்ள சொந்த ஊரான கொச்சியில் வசித்து வருகிறார். கடந்த 24ம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் லட்சுமி மேனன் நண்பர்களுக்கும், ஐ.டி., ஊழியர்கள் சிலருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின், ஐ.டி., ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற காரை, நடிகை லட்சுமி மேனனும், அவரது நண்பர்களும் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து ஐ.டி., ஊழியர்களிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளனர். இது தொடர் பான வீடியோ சமூகவலைதளங்களிலும் வெளியானது. இந்நிலையில், அந்த காரில் இருந்த ஒரு ஐ.டி., ஊழியரை லட்சுமிமேனனின் நண்பர்கள் கடத்திச் சென்று தாக்கிவிட்டு பின்னர் விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், இளம் ஐ.டி., ஊழியரை கடத்திச் சென்றபோது, அந்த காரில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை கொச்சி போலீஸ் கமிஷனர் புட்டா விமலாதித்யாவும் உறுதி செய்துள்ளார். கடத்தல் மற்றும் தாக்குதலில் லட்சுமி மேனனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விரிவாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Srinivasan
ஆக 28, 2025 10:23

இந்த பூனையும் பால் குடிக்குமா.....இல்ல இல்ல ......மதுவே குடிக்கும்.............


நிக்கோல்தாம்சன்
ஆக 28, 2025 02:28

போதை உள்ளே போய்விட்டாள் மறுமவள் ஜாயிண்ட்டா எடுத்த மங்கை , இங்கே வேங்கை ஆயிடுவா போல ?


புதிய வீடியோ