உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் இருந்து பஞ்சாபுக்கு தண்ணீர் தருவதா: உமர் அப்துல்லா எதிர்ப்பு

காஷ்மீரில் இருந்து பஞ்சாபுக்கு தண்ணீர் தருவதா: உமர் அப்துல்லா எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்குவதை ஏற்க முடியாது என முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கூறி வருகிறது.இந்நிலையில், ஒப்பந்தம் ரத்தானதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானுக்கு திருப்பி விட மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. இதற்காக கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.இது தொடர்பாக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது: பஞ்சாப்புக்கு ஏன் தண்ணீர் தர வேண்டும்.இதனை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். எங்களது தண்ணீர் முதலில் எங்கள் பயன்பாட்டிற்கு தான். ஜம்முவில் வறட்சி போன்ற சூழ்நிலை நிலவுகிறது. அப்படி இருக்கும்போது பஞ்சாப்புக்கு ஏன் தண்ணீர் அனுப்ப வேண்டும். அம்மாநிலம் ஏற்கனவே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீரை பெற்று வருகிறது. எங்களுக்கு தேவையாக இருக்கும்போது அவர்கள் தண்ணீரை தரவில்லை. எங்களை பல ஆண்டுகளாக அழ வைத்தனர். தற்போதைக்கு தண்ணீர் எங்களுக்கு. நாங்கள் முதலில் பயன்படுத்துகிறோம். பிறகு மற்றவர்களை பற்றி யோசிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.காரணம் என்ன கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர், பதன்கோட்டில் கட்டப்பட்ட தடுப்பணை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ரவி நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த இந்த தடுப்பணை கட்டப்பட்டது. இது தொடர்பாக 1979 ல் இரு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் அது செயல்படுத்தப்படவில்லை. பஞ்சாப் அரசு இதற்கு பிரச்னை எழுப்பியதாக கூறப்படுகிறது. 2018 ல் மத்திய அரசு தலையிட்ட பிறகே, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனை மனதில் வைத்தே பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்க உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

c.mohanraj raj
ஜூன் 21, 2025 19:47

370 சட்டப்பிரிவை வைத்துக் கொண்டு,இந்தியாவின் மொத்த வருமானத்தையும் தின்று தீர்த்தீர்களே அப்பொழுது தெரியவில்லையோ


venugopal. s
ஜூன் 21, 2025 09:54

இவனை பாக் அனுப்பி பிரதமராக ஆக்க வேண்டும்


sankaranarayanan
ஜூன் 21, 2025 08:52

காஷ்மீரில் பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்குவதை ஏற்க முடியாது என முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார். இதுவரையில் பாகிஸ்தானுக்கு தரப்பட்ட தண்ணிரைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இப்போது இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தானுக்கு கொடுக்கும்போதுதான் இவருக்கு ஞானோதயம் உண்டாயிற்றா இனம் இனத்தோடுதான் சேருகிறது பரிந்து பேசுகிறது


V RAMASWAMY
ஜூன் 21, 2025 08:51

அனைத்து குடிமக்களிடமிருந்தும் வசூல் செய்யும் பணத்திலிருந்து காஷ்மீர் பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து மாநில வீரர்களும் ஒரு சேர அந்த மாநிலம் முன்னேற பாடுபட்டிருக்கும்போது, இவர் சுயநலமாக காஷ்மீர் என்பதும் பாரதத்தின் ஒரு அங்கம் என்பதை மறந்து பேசுவது அழகல்ல. கட்சிக்கு அவர் கட்சிக்கு ஜம்மு & காஷ்மீர் தேசீய கட்சி என்று பெயர் வைதிருப்பது போலியா?


MUTHU
ஜூன் 21, 2025 08:01

இந்தியர்களின் சீக்கு இதுதான். இவ்வளவு நாள் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுத்த பொழுது கேட்க ஒரு நாதியும் இல்லை.


vbs manian
ஜூன் 21, 2025 07:59

இன்னொரு நதி நீர் பிரச்சினை.


சிவம்
ஜூன் 20, 2025 22:08

ஐயா அப்துல்லா, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து பெற்று தந்த நாள் முதல் 2019 வரை இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் உங்களுக்கு பணம் கிடைத்து கொண்டிருந்தது என்பதை மறவாதீர்கள். தவிர இந்தியாவின் மற்ற மாநில மக்களால் கிடைக்கும் சுற்றுலா வருவாய் உங்களுக்கு மிக அவசியம். உங்கள் மாநிலம் சுய சார்பு மாநிலம் ஆகும் வரை மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டு பட்டு இருப்பது உங்கள் மாநில எதிர் காலத்திற்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை