உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; நவம்பர் 10ல் முன்னோட்டம் துவக்கம்

டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; நவம்பர் 10ல் முன்னோட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நவம்பர் 10ல் தொடங்குகிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்த கணக்கெடுப்பு 2027ம் ஆண்டு நடத்தப்படும்; இந்த கணக்கெடுப்பில் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பு முழுவதும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. இதற்கென மொபைல் செயலிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் லேஅவுட் மேப் மற்றும் சென்சஸ் 27 ஹவுஸ் லிஸ்ட் என்ற இந்த மொபைல் செயலிகள் வழியாக பொதுமக்கள் தகவல்கள் நேரடியாக உள்ளீடு செய்யப்படும். முந்தைய கணக்கெடுப்புகளில், அரசு ஊழியர்கள் வீடு வீடாக வந்து படிவங்களை பூர்த்தி செய்து செல்வர். அந்தப் படிவங்களில் இருக்கும் தகவல்கள், பின் நாட்களில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்படும். ஆனால் அதற்கு மாறாக, இந்த முறை நேரடியாகவே டிஜிட்டல் வழியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. நவம்பர் 10-ல் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்டம், நவம்பர் 30 வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்படுகிறது.முன்னோட்டம் நடத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மொபைல் செயலிகள் வழியாக தாங்களாகவே தங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்து விடலாம். அதன் பிறகு அரசு அலுவலர்கள், தகவல் சரிபார்ப்புக்காக வீடு தேடி வருவர். வீடுகளில் இருக்கும் வசதிகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் வகையில், 30 கேள்விகளுக்கான பதில்களை பொதுமக்கள் அளிக்க வேண்டி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மணிமுருகன்
நவ 08, 2025 23:51

அருமை வரவேற்கிறேன் இச்செய்தி அனைத்து தரப்பினரிடமும் சென்று சேர வேண்டும்


visu
நவ 08, 2025 19:32

இட ஒதுக்கீடுகளை ரத்து செய்தால் நாட்டுக்கு நல்லது இல்லாவிட்டால் பெரும்பான்மை இனவாதம் பரவும்


GMM
நவ 08, 2025 18:42

சாதி, மத அடிப்படையில் அரசின் சலுகைகள் இருப்பதால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் அந்த விவரம் தேவை. நிரந்தர முகவரி, இருப்பிட, பணியிட முகவரி சேகரிக்கலாம். பிறப்பிடம், இருப்பிடம் விவரம் மேலும் வாரிசு விவரம் எடுக்க வேண்டும். நிலையற்ற டிவி, மிக்சி போன்ற விவரங்கள் தவிர்க்க வேண்டும். பிற ரேஷன், கேஸ், வங்கி, செல் போன், பாஸ்போர்ட், வீட்டு வரி, வருமான வரி எண் போன்றவை உதவும்.


RAMESH KUMAR R V
நவ 08, 2025 17:26

டிஜிட்டலில் அசத்தும் இந்தியா. வளர்க பாரதம்.


Kumar Kumzi
நவ 08, 2025 16:43

ஐயோ துண்டுசீட்டு கோமாளிக்கு அடுத்த பேதி மருந்தா பேஸ்மெண்ட் ஏற்கனவே வீக் ஆச்சே ஹீஹீஹீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை