உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமாற்றம் அளிக்கிறது!

ஏமாற்றம் அளிக்கிறது!

கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு என் வாழ்த்துகள். அவரது அமைச்சரவையில், குறைந்தது காங்கிரசைச் சேர்ந்த ஒரு பெண்ணாவது இடம் பெற்றிருப்பார் என, எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு பெண் கூட அமைச்சரவையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மார்கரெட் ஆல்வா மூத்த தலைவர், காங்கிரஸ்

பிரதமராக இருக்க மாட்டார்!

பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்புகளில், தற்போது கிளர்ச்சி வெடித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் என் கணிப்புப்படி, இன்னும் ஓராண்டு காலத்தில் மோடி பிரதமராக இருக்க மாட்டார். நாட்டு மக்களின் கோபத்தை அடக்க, பா.ஜ., அரசு அவசரநிலை போன்ற சூழலை உருவாக்கலாம். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

ராகுலுக்கு நல்லதல்ல!

நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்க ராகுல் தொடர்ந்து அவதுாறு பரப்பி வருகிறார். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், காட்டுமிராண்டித்தனமாக பேசி வருகிறார். அவரது பாட்டி இந்திரா தான், அவசரநிலையை அமல்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தை நசுக்கினார். அராஜகவாதி போல ராகுல் பேசுவது நல்லதல்ல. செஷாத் பூனாவாலா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ