உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு பணம் அனுப்புவோருக்கு சலுகை

வெளிநாட்டு பணம் அனுப்புவோருக்கு சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவுகளுக்கு கல்வி, மருத்துவச் செலவுக்காகவும், முதலீடுகளுக்காகவும், இங்கிருந்து பணம் அனுப்பும்போது, அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது. இதுவரை, 7 லட்சம் ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அனுப்பினால், அதற்கு வரிப் பிடித்தம் செய்யப்படாது.மருத்துவ காரணங்களுக்கு, 5 சதவீதம், முதலீடு மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கு, 20 சதவீதமாக இருந்த வரி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.கல்விக்காக பணம் அனுப்பும்போது, அது நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக பெறப்பட்டிருந்தால், அதற்கு வரிப் பிடித்தம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ