உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போச்சு... எல்லாமே போச்சு...! இதுவரை இல்லாத அதிருப்தி; திரிணமுல் சர்வே முடிவால் அதிர்ச்சியில் மம்தா!

போச்சு... எல்லாமே போச்சு...! இதுவரை இல்லாத அதிருப்தி; திரிணமுல் சர்வே முடிவால் அதிர்ச்சியில் மம்தா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிருப்தியை ஏற்பட்டிருப்பது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

சம்பவம்

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mykgl5ju&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதுவரை இந்த சம்பவத்தில் எந்த தீர்வும் கிடைக்காததால், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீது அதிருப்தி அலை நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.

கொந்தளிப்பு

இதனிடையே, லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்வதாக பெண் டாக்டர் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருப்பது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வே

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இருந்து அடிக்கடி மக்களிடையே சர்வே எடுப்பதை திரிணமுல் காங்., வழக்கமாக கொண்டுள்ளது.

பின்னடைவு

அந்த வகையில், தற்போது எடுக்கப்பட்ட சர்வே அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜி.,கர் மருத்துவமனையின் டீன் சந்தீப் கோஷ் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி தயக்கம் காட்டுவதாக அவரது கட்சியினர் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.இந்நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் விசாரணையை முன்னெடுக்காமல், பணம் கொடுக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டிருப்பது, யாரையோ காப்பாற்றும் செயல் என்று சொல்லப்படுகிறது. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு மம்தா பானர்ஜிக்கு எதிரான மனநிலை மக்களிடையே எழுந்துள்ளது. முன்னாள் திரிணமுல் அமைச்சர்களான பார்த்தா சாட்டர்ஜி, ஜோதிப்ரியா மல்லிக் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிகம் பேசப்பட்டுள்ளது.

அதிருப்தி

கோல்கட்டா டாக்டர் கொலை சம்பவம் தொடர்பான தாக்கம் நகர்புறங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் எதிரொலித்து வருவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்த முடிவுகளால் மம்தா கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'சந்தீப் கோஷ் போன்ற குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி செயல்படுவது ஏன் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று, பெயர் வெளியிட விரும்பாத திரிணமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகியே தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Sivagiri
செப் 06, 2024 14:31

டில்லிக்கு அடுத்த பிளைட் எப்போ ? . . . உள்ளூரில் போராடினால் , அவ்வளவு எடுபடலை - - பழைய பாணியில் , நேரா டில்லி மைதானத்தில் போயி போராடினால்தான் , ரிப்பேரான பேர் சரியாகும் போல . . .


சமூக நல விரும்பி
செப் 06, 2024 13:26

திர்ணமுள் காங்கிரசால் இப்போது இந்தியாவில் உச்சநீதி மன்றம் மற்றும் சிபிஐ அமைப்புகளுக்கு இருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விட்டது. நாடு எங்கே போகிறது நாளை என்ன நடக்கும் என்று மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. மத்திய அரசுக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமைக்க ஜனாதிபதி பரிந்துரை அவசியம்.


sankaranarayanan
செப் 06, 2024 13:05

வாங்க தேசத்து நிலைமை அண்டை நாடான மேற்கு வாங்க மாநிலத்திற்கும் பரவும் போல் உள்ளது அங்கே நடந்த அதே நிலைமை இங்கு உள்ள ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நேர்ந்துவிடும் போலத்தான் உள்ளது ஜாக்கிரதை மக்களே விழித்துக்கொள்ளுங்கள் ஆட்சியாளர்களின் மக்கள் பணம் பாதாலத்தின்வரை செல்லும்


N.Purushothaman
செப் 06, 2024 12:33

இந்திய அரசியல்வாதிகள் அண்டை நாட்டில் அந்நாட்டு சிறுபான்மையினர் அரசியல்வியாதிகளால் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை பார்த்தாவது திருந்துவார்களா ? அவர்களை அங்கு ஒட்டு வங்கியாக வர்கள் பார்ப்பதே இல்லை ....


Ramesh Sargam
செப் 06, 2024 11:35

யானைக்கும் ஒரு ஆள் அடி சறுக்கும். அதுபோல பல ஆண்டுகளாக சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்துகொண்டிருந்த இந்த பெண் யானைக்கும் அடி சறுக்க ஆரம்பித்துவிட்டது. இனி எல்லாம் நலமே


Lion Drsekar
செப் 06, 2024 10:59

பகல் கனவு, வெள்ளம் ஒரு பிரநிதிகூட எல்லவில்லை, இவர்கள் உதவி செய்கிறார்கள் , மக்கள் ஆனந்தம் என்றெல்லாம் செய்திவந்தது, தேர்தலும் வந்தது ஆனால் வெற்றி யாருக்கு ? தான் வாழ எதைப்பற்றியும் கவலைப்படாத நிலைக்கு சென்றுவிட்டதால் , இனி இதைவிட மோசமாகத்தான் எல்லா இடத்திலும் இருக்கும், இவர் வெளிநாட்டுக்குச் என்று முதலீடு எதுவும் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவதில்லை மாறாக வாக்கு வங்கிக்காக .... வந்தே மாதரம்


RAJ
செப் 06, 2024 10:51

1× கூட தகுதி இல்லாத ஒரு முதலமைச்சர். மூளை மழுங்கிய கூட்டத்தின் முதலமைச்சர். தனக்கு எதிராக தானே போராட்டம் நடத்தும் ஒரு கோமாளி.


Barakat Ali
செப் 06, 2024 09:41

இதனால 2026 ல ஆட்சி போயிரும் என்பதெல்லாம் சும்மா ..... அராத்து கட்சிகளைத்தான் கேரள, மேற்குவங்க, தமிழக மக்கள் விரும்பறாங்க .....


Kumar Kumzi
செப் 06, 2024 09:32

இந்த மும்தா பேகத்தை சிறையில் அடைக்க வேண்டும்


Duruvesan
செப் 06, 2024 09:28

இதெல்லாம் சும்மா, சிண்டு முடியும் வேலை, ரோஹிங்கயா பெங்காலி மூர்க்ஸ் உள்ள 50%வரை பேகத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.


rasaa
செப் 06, 2024 10:15

100% உண்மை.