உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெய்வீகம் நிறைந்த தீபாவளி: முதல்வர் ரேகா

தெய்வீகம் நிறைந்த தீபாவளி: முதல்வர் ரேகா

புதுடில்லி: “தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு சனாதனி அரசின் கீழ் கொண்டாடப்படும் தீபாவளி தெய்வீகம் மற்றும் மகத்துவம் நிறைந்ததாக இருக்கும்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார். புதுடில்லி தீன் தயாள் மார்க்கில் உள்ள டில்லி பா.ஜ.,வின் புதிய அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அகல் விளக்குகளை ஏற்றி வைத்து முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: தலைநகர் டில்லியில் சனாதனி அரசின் கீழ் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தீபாவளி, தெய்வீகம் மற்றும் மகத்துவம் நிறைந்ததாக இருந்ததாக இருக்கும். யமுனை நதியை சுத்தம் செய்தல், பச்சைப் பட்டாசு மீதான தடையை நீக்குதல் ஆகியவற்றுக்காக பா.ஜ., அரசு கடுமையாகப் போராடி வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் டில்ல் மக்களுக்காக பா.ஜ., அரசு உழைத்து வருகிறது. டில்லி மக்களுக்கு தீபத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா, பா.ஜ., - எம்.பி.,க்கள் மனோஜ் திவாரி, பான்சூரி ஸ்வராஜ், யோகேந்தர் சிங் சந்தோலியா, டில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா மற்றும் டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுடில்லி கர்தவ்ய பாதையில் நேற்று மாலை நடந்த, 'தீபோத்சவ்' நிகழ்ச்சியில், ஒரு லட்சத்து 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ராமகாவியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை