உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

புதுடில்லி; பிரபல தாதா சோட்டா ராஜன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டாராஜன். 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. 2015ம் ஆண்டு இந்தோனேசியாவில் பதுங்கி இருந்த சோட்டா ராஜனை இந்திய போலீசார் கைது செய்து தாயகம் அழைத்து வந்தனர். கடந்த மே மாதம், ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி படுகொலை வழக்கில் மும்பை கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சோட்டா ராஜன், தண்டனை அனுபவித்து வருகிறார். இந் நிலையில், சிறையில் இருந்த சோட்டா ராஜனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சோட்டா ராஜனுக்கு சைனஸ் தொந்தரவு இருப்பதை உறுதி செய்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதால், சோட்டா ராஜன் இருக்கும் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 21:07

ட்ரீட்மெண்ட்டு முடிஞ்சு நல்லா ஆனபிறகு அவன் எது கேட்டாலும் அரேஞ்ஜ் பண்ணிக்கொடுப்பானுங்க ...


Ramesh Sargam
ஜன 10, 2025 20:40

60 வழக்குகளில் ஈடுபட்ட ஒருவனை அவர் இவர் என்று கூறுவது சரியா? குற்றவாளிக்கு என்ன மரியாதை? அவனுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்கள் வரிப்பணத்தில் மருத்துவம். உருப்பட்ட மாதிரிதான்..


முக்கிய வீடியோ