உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீதியடைய வேண்டாம்!

பீதியடைய வேண்டாம்!

வெப்ப அலை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். தினசரி எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும். வெப்பம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இதில், மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,

வெறும் கண்துடைப்பு!

மேற்கு வங்கத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெறும் கண்துடைப்பு. அவை பங்குச்சந்தையை நிலைநிறுத்தவே வெளியிடப்படுகின்றன. இதை யாரும் நம்ப வேண்டாம். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளி ல் திரிணமுல் காங்., அமோக வெற்றி பெறும். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., கட்சி

வெற்றி பெற முடியாது!

வாக்காளர்களை குழப்பமடைய செய்ய வேண்டும் என்பதற்காகவே தே ர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு களில் பா.ஜ., தில்லுமுல்லு செய்துள்ளது. மக்களை தவறாக வழிநடத்த அக்கட்சி முயற்சி செய்யலாம். ஆனால் அதில் வெற்றி பெற முடியாது. ஓட்டு எண்ணிக்கை நாளன்று பா.ஜ.,வின் முகத்திரை கிழிக்கப்படும். கவுரவ் கோகோய், அசாம் மாநில காங்., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
மே 03, 2026 10:00

திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பங்கு சந்தை ஊசலாடும் என்று மம்தா பானர்ஜியே ஒப்புக் கொள்கிற மாதிரி இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை