உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாருடனும் மோதலை விரும்பவில்லை: ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி பேட்டி

யாருடனும் மோதலை விரும்பவில்லை: ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நாங்கள் யாருடனும் மோதலை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறது'' என ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இந்தியாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டு உள்ளேன். இந்த பயணம் இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவுடனான எங்கள் வர்த்தகம் 1 பில்லியன் டாலர்களை தாண்டியது. காபூலில் தூதரகம் திறக்க இந்தியா முடிவு செய்து இருப்பது நல்லது. ஆப்கானிஸ்தானில் பணிபுரிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அமைதி அடையப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் யாருடனும் மோதலை விரும்பவில்லை. பாகிஸ்தான் எங்கள் ஒரே அண்டை நாடு அல்ல. எங்களுக்கு இன்னும் ஐந்து அண்டை நாடுகள் உள்ளன. அவர்கள் அனைவரும் எங்களுடன் நல்ல உறவை கொண்டுள்ளனர். இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே இடையே விமான வசதிகள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு அமிர்கான் முட்டாகி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBBU,MADURAI
அக் 13, 2025 19:19

வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் அகராதியும் வேறுதான் என்று பழைய பாடல் ஒன்றை கேட்டிருக்கிறேன். அதே போல் இந்த ஆஃகான் அமைச்சர் அமிர்கான் முட்டாகி நாங்கள் யாருடனும் போரை விரும்ப வில்லை என்று கூறியிருப்பதன் அர்த்தம் கூடிய விரைவில் வரலாறு கானாத வகையில் பாகிஸ்தானில் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை நிகழ்த்த போகிறோம் என்பதற்கான அறிகுறியாகத்தான் அவருடைய பேச்சை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ முன்பு நம் காஷ்மீரில் தீவிரவாதிகளை அனுப்பி நமக்கு எவ்வளவு தீராத தொல்லை கொடுத்ததோ அதற்கெல்லாம் பழி தீர்க்கும் விதமாக நம் உளவுத்துறை RAW தலிபான்களுடன் சேர்ந்து பாகிஸ்தானில் வெறியாட்டம் போடுவதற்கு திட்டம் வகுத்து விட்டது. அந்த ஆபரேஷன் இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு பின்பா அல்லது தீபாவளி அன்றைக்கா என்பது கூடிய விரைவில் நமக்கு தெரிய வரும்...


ராஜா தென்காசி
அக் 13, 2025 18:47

இதான் இந்தியாவின் மிக சிறந்த ராஜதந்திரம் எந்த இடத்தில் இருந்து இப்படி பேட்டி கொடுத்து பாகிஸ்தான் க்கு கலக்கத்தில் வைக்கும் செயல்


சமீபத்திய செய்தி