வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மமதை கான் க்ராஸ் க்கு உன் அம்மா ஈகோ பார்க்காமல் தலைவி ஆக்கி இருந்தால் திரிணமூல் அப்டின்னு ஒண்ணு இல்லாமல் இருந்து இருக்கும். தப்பு பண்ணிட்டியே சிங்காரம்...
நாட்டின் எரிபொருள் மற்றும் உரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பா.ஜ., அரசு இரட்டைத் தோல்வி அடைந்து உள்ளது. எரிவாயு உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை திசைதிருப்பவே தொகுதி மறுவரைய றை நாடகத்தை மோடி அரசு அரங்கேற்றியுள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அதன் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர். - மல்லிகார்ஜுன கார்கே, தேசிய தலைவர், காங்கிரஸ்ஆச்சரியமான தீர்ப்பு!
திரிணமுல் காங்., மற்றும் காங்கிரசின் நாடகங்களையும் நிராகரித்து, மேற்கு வங்க மக்கள் பா.ஜ.,வுக்கு ஆச்சர்யமான தீர்ப்பை வழங்குவர். தமிழகத்தில், சனாதன எதிர்ப்பு மனப்பான்மைக்கு தி.மு.க., உரிய விலை கொடுக்க நேரிடும். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல் நிலவுவதால், எங்களுக்கு வெற்றி நிச்சயம். - நிதின் நபின், தேசிய தலைவர், பா.ஜ.,வளர்ந்திருக்க முடியாது!
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., துாய்மையான ஆட்சி வழங்கி, இருந்திருந்தால் பா.ஜ.,வால் அங்கு வளர்ந்திருக்கவே முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிரான, 'ஒரே தேசம்; ஒரே மொழி' என்ற சித்தாந்தத்தை பா.ஜ., முன்னிறுத்தி வருகிறது. அதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருகிறது. - ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
மமதை கான் க்ராஸ் க்கு உன் அம்மா ஈகோ பார்க்காமல் தலைவி ஆக்கி இருந்தால் திரிணமூல் அப்டின்னு ஒண்ணு இல்லாமல் இருந்து இருக்கும். தப்பு பண்ணிட்டியே சிங்காரம்...