உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏப்., 24ல் வரையாடு கணக்கெடுப்பு

ஏப்., 24ல் வரையாடு கணக்கெடுப்பு

மூணாறு:கேரளா, தமிழகத்தில் ஏப்., 24 முதல் 27 வரை வரையாடு கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்பணிக்கு, பெரியாறு புலிகள் காப்பக கள இயக்குநர் பிரமோத் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் திருவனந்தபுரம் முதல் வயநாடு வரை, 20 வன பிரிவுகளில், 89 பிளாக்குகளில் வரையாடுகள் நடமாட்டம் உள்ளது. அவற்றில் கணக்கெடுப்பு நடத்துவதுடன் வரையாடு மரபணு மாறுபாடு குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு ஏப்., 29 முதல் மே 2 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இரவிகுளம் தேசிய பூங்காவில் மட்டும், புதிதாக பிறந்த 144 குட்டிகள் உட்பட 827 வரையாடுகள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை