உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலைகளில் தொழுதால் ஓட்டுநர் உரிமம் ரத்து

சாலைகளில் தொழுதால் ஓட்டுநர் உரிமம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மீரட்: ரம்ஜான் பண்டிகையையொட்டி, சாலைகளில் தொழுகை நடத்தினால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என, உத்தர பிரதேச போலீசார் அறிவித்துள்ளனர். ரம்ஜானையொட்டி, முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடித்து வரும் நிலையில், ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ரம்ஜான் நாளில் சாலைகளில் கூடி தொழுகை நடத்துவதற்கு உ.பி., போலீசார் தடை விதித்துள்ளனர்.நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் போது, மசூதிகளிலும், பிரத்யேகமான இடங்களிலும் மட்டுமே சிறப்பு தொழுகைகளை நடத்த வேண்டும் என்றும், சாலைகளில் நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிலையங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதையும் மீறி சாலைகளில் தொழுகை நடத்தினால், கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மீரட் போலீஸ் எஸ்.பி., விபின் தடா எச்சரித்துள்ளார். ரம்ஜானையொட்டி உ.பி., முழுதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில், ''தடையை மீறி சாலையில் தொழுகை நடத்துவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவானால், அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்; அவை பறிமுதல் செய்யப்படும்.நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறாமல், புது பாஸ்போர்ட் பெறுவது கடினமாகி விடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Indian
மார் 31, 2025 23:12

இதே போல் தீபாவளி பொது இடத்தில வெடி வெடிச்சு இடையூறு செய்றவங்க விநாயகர் சதுர்த்தi கு பொது இடத்தில சிலை வச்சு இடன்சல செய்றவங்களுக்கு ஹோலிக்கு அடுத்தவன் மேளா கலர் பொடி அடிச்சு தொல்லை தற்றவனுக்கும் தண்டனை குடுதுறுந்த நீ நேர்மையான அரசு னு சொல்லலாம்


Indian
மார் 31, 2025 22:58

،இதே போன்று ஹோலி பண்டிஹையயால் அடுத்தவருக்கு இடன்சல் செய்றவனுக்கும் பாஸ்போர்ட் ரத்து செய்யணும் மேலும் அதையும் தங்கள் வீடுகளில் கொண்டாட வைக்க சட்டம் போடணும்


Delhi Balaraman
மார் 31, 2025 11:41

மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தெருக்களிலும் சந்து பொந்துகளிளும் கலர் பொடி தூவியும் கலர் தண்ணீர் ஊற்றியும் ஆர்ப்பரிக்கும் போது, இப்போது கூப்பாடு போடுபவர்களுக்கு அன்றைய தினம் தெரியாமல் போய்விட்டதா. அனைத்து மத சம்பிரதாயமும் ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டும்.இதில் மத வேறுபாடின்றி நடந்து கொள்வது தான் ஜனநாயகம்


Noble Noel
மார் 31, 2025 05:49

இது ஒரு மதம் சம்பத்தப்பட்ட காரணத்தினால் இவ்வளவு கொடூர தண்டனை. மற்ற மதத்தினர் பண்டிகையின் போது சாலைகள் முழுவதும் மறைத்து கொண்டாடுபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆசசர்யம் பாஸ்போர்ட் லும் ஒட்டுநர் உரிமத்திலும் கை வைக்கும் மதவாதிகள்.


Barakat Ali
மார் 30, 2025 21:07

எனது கை இன்னொருவரின் மூக்கு வரை நீளக்கூடாது ...... அதாவது எனக்கு சுதந்திரம் உண்டு என்றாலும் மற்றவர்களின் தனியுரிமையை அது மீறக்கூடாது ....


Natarajan Ramanathan
மார் 30, 2025 16:49

சீன ஜப்பான் போல மதத்தை வீட்டுக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள சட்டம் போடவேண்டும்.


Suresh R
மார் 30, 2025 11:47

We must be fair in whatever we do.


LAKSHMIKANTH
மார் 30, 2025 09:18

Good decision by yogi government. All government should follow especially on Friday prayers


Indian
மார் 30, 2025 09:04

மரண தண்டனை கொடுங்கள்


INDIAN
மார் 29, 2025 18:46

ஹோலிப்பண்டிகை தீபாவளி சதூர்த்தி என்று எல்லா இந்து பண்டிகைக்கும் வெளியில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அது இடைஞ்சல் இல்லை. இஸ்லாமிய பண்டிகைக்கு மட்டும் வெறுப்பை காட்டுகிறது காட்டுமிராண்டி உபி அரசு. மதவாத அரசியல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. அரசு தன் இயலாமையை மதவெறியினல் மூடி மறைக்க நினைக்கிறது. இந்து மக்கள் மத்தியில் நல்ல வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாத துப்பில்லாத நிலையில் இது போன்ற கேவலமாக மதவாத அரசியல் செய்து இந்து மக்களை ஏமாற்ற நினைப்பது மடத்தனமான செயல். இந்து மக்கள் லிழிப்பணர்வு பெற்று விட்டால் அவர்களாலேயே துரத்தி அடிக்கப்படும் இது போன்ற ஆட்சியை. வெகுவிரைவில்


சமீபத்திய செய்தி