உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத் அருகே ஆளில்லா விமானம் விபத்து: பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது

குஜராத் அருகே ஆளில்லா விமானம் விபத்து: பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது

போர்பந்தர்: குஜராத் அருகே ஆளில்லா விமானம் திறந்த வெளியில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய விவரம் வருமாறு; போர் பந்தர் விமானப்படை தளம் அருகே ஆளில்லா விமானம் வழக்கமான ஒத்திகை பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தால் எவ்வித உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்படவில்லை. விபத்தை இந்திய கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது. விபத்தில் சிக்கியது திருஷ்டி 10 ஆளில்லா விமானம், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.சம்பவத்தை தொடர்ந்து, கடற்படை அதிகாரிகள், போலீசார், தீயணைப்புத் துறையினர் விபத்து பகுதியில் ஆய்வு நடத்தினர். தொழில்நுட்ப கோளாறா அல்லது மோசமான வானிலையா என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி