உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் ஏட்டிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி.,

போலீஸ் ஏட்டிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி.,

ஷிவமொக்கா : போலீஸ் ஏட்டிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி., லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஷிவமொக்கா மாவட்ட கருவூலத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பிரசன்னா. இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வருகிறார். சமீபத்தில் நடந்த யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். அடுத்த கட்ட தேர்வுக்கு தயாராகி வருகிறார்.தேர்வுக்கு தயாராக, கருவூலத்தில் பணி செய்வதே உகந்ததாக இருப்பதாகவும், இங்கேயே பணியை தொடர விரும்புவதாகவும் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தியிடம் கூறி உள்ளார்.இதற்கு டி.எஸ்.பி., 5,000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். “பணம் கொடுத்தால் பணியை தொடரலாம்,” என, கூறி உள்ளார்.ஆனால், பணம் கொடுப்பதற்கு பிரசன்னாவுக்கு இஷ்டம் இல்லை. இதுகுறித்து லோக் ஆயுக்தா எஸ்.பி., மஞ்சுநாத் சவுத்ரியிடம் புகார் அளித்தார். நேற்று டி.எஸ்.பி., லஞ்சம் வாங்கியபோது, அவரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே, அவர் மீது லஞ்சம் வாங்கிய புகார்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மார் 26, 2025 19:27

ஒரு அன்பளிப்பு கேட்டார். அதைபோய் லஞ்சம் என்று கூறுவது சரியல்ல.


Raj
மார் 26, 2025 14:12

கையூட்டு அல்ல கடன் வாங்கிருக்கிறார் அவ்வளவு தான்.


V K
மார் 26, 2025 13:12

உலக மகா அதிசயம்


rama adhavan
மார் 26, 2025 08:17

அட, அங்கேயும் அப்படியா ஓ, எங்கேயும் அப்படித்தான் போல் இருக்கிறது.


தமிழ் நாட்டு அறிவாளி
மார் 26, 2025 07:27

அபசாரம். லஞ்சம் னு சொல்லாதீங்க. ...வாங்கினார் என சொல்லுங்கோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை