உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.2 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் 8) இந்தியா வருந்தார். டில்லி விமான நிலையத்தில் அவரை மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார். டில்லி விமான நிலையத்தில் துபாய் இளவரசர் இறங்கியதும் இசை நிகழ்ச்சிகள் நடந்தது.அவருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் வருகை இரு நாட்டு உறவுகளின் மைல்கல்.அவருக்கு விமான நிலையத்தில் சம்பிரதாய ரீதியான மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது, என்றார்.துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ravi
ஏப் 09, 2025 09:23

இந்த பந்தம் நல்ல பந்தம் என்றே சொல்ல வேண்டும் இந்தியாவுக்கு எப்போதும் பக்க பலமாக ,நம்பிக்கை உடையவர்களாக இருப்பது மிக்க மகிழ்ச்சி இந்த அரபு மக்களை பார்த்து இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது நன்றி, வாழ்க வளமுடன்


மீனவ நண்பன்
ஏப் 08, 2025 18:32

நம்ம பாய்ஸ் பச்சை விரும்பிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை