உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்சம் வாங்கிய அதிகாரியை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஈ.டி. ரிட் மனு

லஞ்சம் வாங்கிய அதிகாரியை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஈ.டி. ரிட் மனு

புதுடில்லி,மதுரையில், டாக்டரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது கட்டுப்பாட்டில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில், ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தள்ளுபடி

தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த, அரசு டாக்டர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சில மாதங்களுக்கு முன் மதுரையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுக்களை, திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தன. மேலும், அங்கித் திவாரிக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அங்கித் திவாரி மீது அமலாக்கத் துறை தரப்பிலும் வழக்கு பதியப்பட்டது. அதில், 'அங்கித் திவாரி யிடம் துறை ரீதியாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, அவர் லஞ்சம் வாங்கியது உண்மை தானா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டிஉள்ளது' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், கடந்த 12ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

எதிர்பார்ப்பு

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுஉள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கனோஜ் ஆங்ரே
ஜன 18, 2024 15:55

மாஜிஸ்ட்ரேட் கோர்ட், செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உயர்நீதிமன்ற பெஞ்ச், அதற்கப்புறம்தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.


duruvasar
ஜன 18, 2024 11:48

இதிலிருந்து செந்தில் பாலாஜி , பொன்முடி வழியில் அமலாக்க துறையும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்பது தெரிகிறது .


GMM
ஜன 18, 2024 09:41

ED யின் தொடர் நடவடிக்கை தேவை. மாநில லஞ்ச ஒழிப்பு மாநில அரசு ஊழியர்கள் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும். பணி விதி மீறல். கருவூலம் அதிகாரி, சம்பளம் வழங்கும் அதிகாரி மற்றும் அரசு தணிக்கை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பணி புத்தகத்தில் உரிய விவரங்கள் பதிவு செய்ய ED மாநில தலைமை செயலாளர் வழியாக கடிதம் அனுப்ப வேண்டும். ED அலுவலகத்தில் சோதனை செய்த ஆவணங்கள் எடுத்து சென்ற அதிகாரிகள் இதில் இணைக்க வேண்டும்.


GMM
ஜன 18, 2024 07:55

ED ரிட் உச்ச நீதிமன்றத்தில். இது தான் சரியான சட்ட வழி. மாவட்ட அளவில் நீதிமன்றம், போலீசார் அணுகுவது தவறான முன் உதாரணம். திவாரி உள்ளூரில் தாக்கல் செய்த மனுவும் தவறு.


D.Ambujavalli
ஜன 18, 2024 06:06

இதையே சாக்காகப் பிடித்துக்கொண்டு நூறு கோடி, முன்னூறு கோடி என்று நீதிபதிக்கும் வலை விரித்துப்பார்ப்போமே நப்பாசைப்பட்டால் அவரையும் மாட்டிவிட்டு தங்கள் பக்கத்து குற்றத்தை மறைக்கலாமே என்றுகூட நினைக்கலாம் சும்மா சொல்லக்கூடாது, 'அறிவியல் பூர்வமாக'. செய்ய இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது


Kasimani Baskaran
ஜன 18, 2024 05:43

அமலாக்கத்துறை மந்திகளை வெளிவர முடியாத அளவில் சிக்கலில் சிக்க வைத்த கடுப்பில் திராவிடம் ஓவராக ஆடியது... அமலாக்கத்துறை ஆட்டத்தை இன்னும் அதி தீவிரமாக ஆரம்பித்து விட்டது என்று சொல்கிறார்கள்.


sankaranarayanan
ஜன 18, 2024 01:55

செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வரும்வரை இந்த அங்கி திவாரியும் சிறையிலேயே இருக்க வேண்டியதுதான் திராவிட மாடல அரசின் சட்டம் இருவரையும் ஒரே பார்வையாகத்தான் திராவிட விடியல் அரசு தீர்மானிக்கிறது எப்படி எங்க ஆர்.எஸ்.பாரதியின் அணுகுமுறை


vaiko
ஜன 18, 2024 01:30

உச்ச நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இடிக்கு கடிவாளம் போடவேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ