உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் 77 பேருக்கு வேலைவாய்ப்பு: இதோ முழு விபரம்!

இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் 77 பேருக்கு வேலைவாய்ப்பு: இதோ முழு விபரம்!

புதுடில்லி: இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்டில் (EIL) மேலாளர், மூத்த மேலாளர், ஆர்க்கிடெக்சர், துணை மேலாளர் உள்ளிட்ட 77 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 4ம் தேதி.மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) ஒரு முன்னணி உலகளாவிய பொறியியல் ஆலோசனை மற்றும் திட்ட மேலாண்மை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.* மூத்த மேலாளர் (Senior Manager) - 12* மேலாளர் (Manager) - 24* அறிவியல் அதிகாரி (Scientific Officer)- 1* அதிகாரி (Officer) - 1* பொறியாளர் (Engineer)- 2* துணை மேலாளர் ( Deputy Manager) - 33* துணை பொது மேலாளர் (Deputy General Manager) - 2* ஆர்க்கிடெக்சர்- 2

கல்வித் தகுதி என்ன?

* துணை மேலாளர் பணியிடங்களுக்கு கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் BE/B.Tech/B.Sc (Eng.) முடித்திருக்க வேண்டும் . குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.* ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் B. Arch முடித்திருக்க வேண்டும்.* மேலாளர் பணியிடங்களுக்கு நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் அல்லது இயற்பியல், அறிவியலில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடங்கள் எங்கே?

புதுடில்லி, சென்னை, கோல்கட்டா மும்பையில் உள்ள கிளை அலுவலகம், ஆய்வு அலுவலகங்கள் போன்றவற்றில் இருக்கும்.

வயது வரம்பு

* மேலாளர் பணியிடங்களுக்கு 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.* மூத்த மேலாளர் பணியிடங்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.* அதிகாரி, பொறியாளர், ஆர்கிடெக்சர் பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.* துணை மேலாளர் பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.* துணைப் பொது மேலாளர் பணியிடங்களுக்கு 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.engineersindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

8 நாட்கள் மட்டுமே!

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 4. இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஆக 27, 2024 11:24

77 லவேலைக்கு 77 லட்சம் பேர் விண்ணப்புச்சு ஆளுக்கு 1000 ரூவாய் தேர்வுக்.கட்டணம் வாங்கி கோடி.கோடியாய் தேத்திடலாம்.


சமீபத்திய செய்தி