உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடமையை செய்யாத தேர்தல் கமிஷன்: ராகுல்

கடமையை செய்யாத தேர்தல் கமிஷன்: ராகுல்

புதுடில்லி: '' தேர்தல் கமிஷன் தனது கடமையைச் செய்யவில்லை. நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்து வருகிறோம்'', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ராகுல் தலைமையில் பேரணி நடந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், ராகுல் இன்று பார்லிமென்ட் வளாகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஓட்டு மோசடி ஒரு தொகுதியில் மட்டும் நடக்கவில்லை. பல தொகுதிகளில் நடந்துள்ளது. தேசிய அளவில் அமைப்பு ரீதியாக நடந்துள்ளது. இது தேர்தல் கமிஷனுக்கு தெரியும். முன்பு ஆதாரம் இல்லாமல் இருந்தது. தற்போது உள்ளது.

அடித்தளம்

அரசியலமைப்பை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். ஒரு நபர் ஒரு ஓட்டு என்பது, அரசியலமைப்புக்கு அடித்தளம். இதனை அமல்படுத்துவது தேர்தல் கமிஷனின் கடமை. ஆனால், தேர்தல் கமிஷன் கடமையை செய்யவில்லை. ஆனால், நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்து வருகிறோம். தொடர்ந்து அதனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

venugopal s
ஆக 12, 2025 21:36

இப்படிச் சொன்னால் எப்படி?


Ganapathy
ஆக 12, 2025 21:03

மோதிக்கும் பாஜகவுக்கும் பொறுமை மிக மிக மிக அதிகம்.


Iyer
ஆக 12, 2025 21:01

இதுவரை 100 தேர்தலில் தோல்வி கண்டு - EVM மீது பழி போட்டுவந்தார். மக்கள் EVM Fraud என்ற குற்றச்சாட்டை நம்பவில்லை. ஆதலால் "இனி வரப்போகும் தேர்தல் தோல்விகளுக்கு" - "SIR" & "Vote திருட்டு" போன்ற பொய் காரணங்களை ஜோடித்து வருகிறார்


Thravisham
ஆக 12, 2025 20:53

மத்திய அரசுக்கும் கோர்ட்டுக்கும் தம் இல்லை


மனிதன்
ஆக 12, 2025 20:52

இங்கே கருத்தெழுதும் அனைவருக்குமே தெரியும் ராகுல் சொல்வது உண்மைதான் என்று, ஆனாலும் தான் கொண்ட சித்தாந்தத்திற்காக கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதையாக வீம்புக்காக முட்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்....


vivek
ஆக 12, 2025 21:43

மூலையில்லா வெத்து வெட்டு ராகுல் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியுமா மனிதா


Suppan
ஆக 12, 2025 21:48

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசின் அதிகாரிகள்தான் வாக்காளர் தொகுப்பைத் தயாரித்தார்கள். பிறகு எதற்காக தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு. இதை வெளியிட்டதற்காக காங்கிரஸ் அமைச்சர் பதவி இழந்தார். ராகுல் செய்வது அப்பட்டமான மட்டமான அரசியல். மக்களைக் குழப்பவே இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளார். இதேதான் பங்களாதேஷில் நிகழ்ந்து ஹசீனா பதவி இழந்து நாட்டை விட்டு ஓடினார். இதற்குத்தானே ராகுல் ஆசைப்படுகிறார். இதைத்தூண்டுவதே அமெரிக்காவில் உள்ள சோரசும் சி ஐ ஏ வும் உள்ள டீப் ஸ்டேட் தான். ராகுலுக்கு வாய்க்கரிசி கிடைக்கிறது. ராகுலின் புருடாவை "மனிதன்" மாதிரி ஆசாமிகளும் நம்புகிறார்கள்.


SUBBU,MADURAI
ஆக 12, 2025 21:54

இங்கே கருத்தெழுதும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும் நீ மனிதன் என்ற பெயரில் இருக்கும் மூர்க்கன் என்று...


SUBBU,MADURAI
ஆக 12, 2025 21:57

சத்தியமா சொல் நீ ரியாத்தில்தான் இருக்கியா என்று!


vadivelu
ஆக 13, 2025 06:55

உண்மையாக இருந்தால், ஆதரத்தோடு கோர்ட்டுக்கு அல்லவா சென்று இருக்க வேண்டும் . இல்லை உங்களை போன்றவர்களாவது கோர்ட்டுக்கு செல்லலாமே .பதிலை சொல்லாதவர்களிடமா முட்டி கொண்டே இருப்பீர்கள். உங்களை போன்றவர்களை நம்ப வைக்கலாம் அவ்வளவே. சிந்திப்பவர்கள உண்மை என்று நம்ப வைக்க முடியாது. வெறுப்பு சிந்திக்கும் திறனை இழக்க வைக்கிறது. கொஞ்சம் யோசியுங்கள் ஏன் கோர்ட்டுக்கு போக மாட்டார்கள் என்று.


R.MURALIKRISHNAN
ஆக 12, 2025 20:26

முதல்ல நாடு கடத்துங்கப்பா


கல்யாணராமன்
ஆக 12, 2025 19:59

உள்ளே தள்ளாதவரை திருந்த போவதில்லை.


V Ramanathan
ஆக 12, 2025 19:52

50 ஆண்டுகளுக்கு முன் சைதாப்பேட்டை தொகுதியில் வெளி மாவட்டங்களிலிருந்து கள்ள வாக்காளர்கள் வரவழைக்கபட்டு ஒருவர் ஜெயித்தார். அவர் யாரென்று சிலருக்கு ஞாபகம் வரலாம்


Thravisham
ஆக 12, 2025 20:52

மிஸ்டர் ஊழலின் ஊற்றுக்கண். விஞ்ஞான ஊழலின் மறுபக்கம்


பேசும் தமிழன்
ஆக 12, 2025 19:44

பப்பு உன்னிடம் ஆதாரம் இருந்தால் தேர்தல் ஆணையம் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.... அதை விடுத்து இப்படி சும்மா சும்மா உளறி கொண்டு இருக்காதே.... ஆதாரம் இருந்தால் தானே கொடுக்க முடியும் ???


தேவதாஸ் புனே
ஆக 12, 2025 19:24

ஐயா, ஆதாரங்களுடன மனு எழுதி கொடுக்க சொல்லியிருக்கிறார்கள்....., இல்லையென்றால் கோர்ட்டில் கேஸ் போட சொல்லியிருக்கிறார்கள்..... நீங்க சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால் மனு எழுதி கொடுக்கலாமே..... ஏன் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை இல்லையா.....?


R.MURALIKRISHNAN
ஆக 12, 2025 20:35

ராகுலுக்கு ராகுல் மீது நம்பிக்கையில்லை அதனால் தான்....இந்த வெட்டி பேச்சு


முக்கிய வீடியோ