நடப்பு கோடையில் மின் தேவை எகிறும்
புதுடில்லி:டில்லியின் நடப்பு மின் தேவை, 9,000 மெகாவாட்டை தொடக் கூடும் என கூறப்படுகிறது. டில்லி மாநில அரசின் மின்சாரம் அனுப்பும் மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் கீழ், இந்த ஆண்டின் கோடை காலத்தில், மாநிலத்தின் மின் தேவை, 9,000 மெகா வாட் என அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 8,442 மெகா வாட் மின்சாரமாக, கடந்த கோடை காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளின் மின் தேவை, 3,798 என்ற கடந்த கால அளவிலிருந்து, 3997 மெகா வாட்டாக அதிகரிக்கக் கூடும். கிழக்கு மற்றும் மத்திய டில்லி பகுதிகளில், உச்ச கட்ட மின் தேவை 1,824 மெகாவாட்டில் இருந்து, 1,991 மெகா வாட்டாக அதிகரிக்கும். இப்படி சென்றால், நடப்பு கோடை காலத்தில், உச்ச பட்ச மின் தேவை, 9,000 மெகாவாட்டை எட்டக் கூடும் என கூறப்படுகிறது. வரும் 2028 - 29ம் ஆண்டில், 10 ஆயிரம் மெகா வாட் மின்சாரம், கோடை காலத்தில் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.