உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லம்மா கோவிலில் ரூ.3.40 கோடி வசூல்

எல்லம்மா கோவிலில் ரூ.3.40 கோடி வசூல்

பெலகாவி: பெலகாவி மாவட்டம், சவதத்தியில் ரேணுகா எல்லம்மா கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.கர்நாடகாவின் பணக்கார கோவில்களில், இதுவும் ஒன்று. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்படும். மூன்று மாதங்களுக்கு பின், நேற்று முன் தினம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. 3.40 கோடி ரூபாய் ரொக்கம், 6.39 லட்சம் ருபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், 20.82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.அமெரிக்கா, நெதர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ