உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனியும் ஹேஷ்டேக் தேவையில்லை; சொல்லிவிட்டார் எலான் மஸ்க்!

இனியும் ஹேஷ்டேக் தேவையில்லை; சொல்லிவிட்டார் எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹேஷ்டேக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது அசிங்கமாக இருக்கிறது என எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவுறுத்தி உள்ளார்.ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை, தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கிவிட்டார். பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி படம் இருந்த, லோகோவை மாற்றினார். டுவிட்டர் என்ற பெயரை 'எக்ஸ்' என மாற்றினார். ஆனால் மக்கள் மத்தியில் இந்த பெயர் எடுபடவில்லை. டுவிட்டர் என்று பயனர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், ஹேஷ்டேக் பயன்படுத்த வேண்டாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். சிஸ்டத்துக்கு இனியும் அவை தேவையில்லை. ஹேஷ்டேக் அசிங்கமாகத் தெரிகின்றன. இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 11:28

ட்விட்டர் னாலும் என்னன்னு தெரியாது. X வலைதளம் னாலும் தெரியல.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 20, 2024 09:18

எக்ஸ் செயலியில் நபர்களை அடையாளப்படுத்த அட் குறியீடும், செய்திகளின் தலைப்பை அடையாளப்படுத்த ஹேஷ் குறியீடும் பயன்படுத்தப்படுகின்றன. ஹேஷ் குறியீட்டை தவிர்த்துவிட்டால் திரெண்டிங், குரூப்பிங் செய்வது தடைப்படும். எதைப்பற்றி கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன என்ற வகைப்படுத்துதல் நின்றுவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை